Home சினிமா தொடங்கியது சர்ச்சை: ‘2.0’ படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி மனு

தொடங்கியது சர்ச்சை: ‘2.0’ படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி மனு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் வரும் நவ.29ம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இந்திய அளவிலான பெரிய பட்ஜெட் படம் என்பதால், இதன் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியாவில் முதன்முறையாக 3டி கேமராவில் படமாக்கப்பட்ட ‘2.0’ திரைப்படத்தை ஹாலிவுட் படங்களை போல் ஐமெக்ஸ் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2point0

இந்நிலையில், இப்படத்தில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இந்திய செல்போன் ஆப்பரேட்டர்கள் சங்கத்தினர் மத்திய தணிக்கத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளனர்.

அவர்களது மனுவில், ’2.0’ படத்தின் டீசரில் செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். எவ்வித ஆதாரமுமின்றி செல்போன்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘கேம் சேஞ்சர்’ ரங்கசாமிக்கு பாஜக கெடு… உடையும் ‘ஆட்சி கவிழ்ப்பு’ கூட்டணி?

தமிழகத்தைக் காட்டிலும் புதுச்சேரியில் நிகழும் அரசியல் ஆட்டங்கள் பிரமிக்க வைக்கின்றன. தமிழகத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அரசியல் நகர்வுகள் நடக்கின்றன. குறிப்பாக கேம் மேக்கராக என்ஆர் காங்கிரஸுன் ரங்கசாமி பார்க்கப்படுகிறார்....

யாருக்கு எத்தனை சீட்டு? ஐபேக் பட்டியலை கொஞ்சம் மாற்றும் ஸ்டாலின்

ஐபேக் பிரசாந்த் கிஷோரும் மு.க.ஸ்டாலின் இருவர் மட்டுமே ஆலோசித்து கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது குறித்த முடிவினை சில மாதங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்கள். திமுகவுக்கு...

ஆனைமலையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல்!

கோவை கோவை அருகே தேங்காய் வியபாரி உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை!

தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடர்ந்து...
TopTamilNews