Home ஆன்மிகம் தை அமாவாசை: கும்பமேளாவில் குவியும் கோடிக்கணக்கான பக்தர்கள்

தை அமாவாசை: கும்பமேளாவில் குவியும் கோடிக்கணக்கான பக்தர்கள்

வட இந்தியாவில் மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

பிரயாக்ராஜ்: வட இந்தியாவில் மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ம் தேதி கும்பமேளா திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்து வருகின்றனர். இதனிடையே, தை அமாவாசையான இன்றைய தினத்தை வடமாநிலத்தவர்கள் மவுனி அமாவாசை என்ற பெயரில் அனுஷ்டிக்கின்றனர்.

இந்நிலையில் இந்நாளில் கடற்கரையிலோ, நதிக்கரையிலோ புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அந்த வகையில், கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர். இதேபோன்று, மவுனி அமாவாசையை முன்னிட்டு, கங்கையின் வழித்தடமான வாரணாசியில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
 

மாவட்ட செய்திகள்

Most Popular

இந்தியாவில் 13.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

நாடு முழுவதிலும் 13,90,592 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 16ம்...

“பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் நேதாஜி ” – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி முதல்வர் பழனிசாமி அவர் குறித்த பதிவினை வெளியிட்டுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர் நேதாஜி. இரண்டாம் உலகப் போரின் போது...

‘முதலமைச்சர் பதவி மு.க ஸ்டாலினின் கனவு’ – முதல்வர் விமர்சனம்!

திமுகவினர் மக்கள் கிராம சபைக் கூட்டி, மக்கள் மத்தியில் நாடகமாடுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பிரச்சாரங்கள்...

சசிகலாவை மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற முடியாத சட்ட சிக்கல்!

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா வந்தபோது அவர் அம்மாநிலத்தில் உள்ள மணிப்பால் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்ட போதும் அதே மணிப்பால்...
Do NOT follow this link or you will be banned from the site!