Home சினிமா தேவ் படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது!

தேவ் படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது!

தேவ் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் லொகேஷன் பற்றிய சுவாரசிய தகவலை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்

சென்னை: தேவ் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் லொகேஷன் பற்றிய சுவாரசிய தகவலை நடிகர் கார்த்தி  வெளியிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் ரஜத் ரவி ஷங்கர் இயக்கியுள்ள தேவ் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்திருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Here is where we shot the climax for #dev. Place called Sisu in Himalayas. Stunning beauty! #devfromfeb14

A post shared by Karthi Sivakumar (@karthi_offl) on

இந்நிலையில் தேவ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இமயமலை சிகரத்தில் “சிசு” என்ற பகுதியில் படம்பிடித்துள்ளனர் என்று கார்த்தி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி ரிலீஸாகும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் கார்த்தி ரசிகர்கள்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews