தேவையற்ற இடங்களில் உள்ள முடிகளை நீக்க இயற்கை வழிகள்..

முகம், கை ,கால்கள் என தேவையற்ற இடத்தில் முடி இருப்பதால் பெண்களின் நம்பிக்கைக் குறைகிறது. எல்லோரும் நம்மையே கிண்டலாகப் பார்க்கிறார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை மனசுக்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக் கொள்ளும்.

முகம், கை ,கால்கள் என தேவையற்ற இடத்தில் முடி இருப்பதால் பெண்களின் நம்பிக்கைக் குறைகிறது. எல்லோரும் நம்மையே கிண்டலாகப் பார்க்கிறார்கள் என்கிற தாழ்வு மனப்பான்மை மனசுக்குள் ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக் கொள்ளும். அழகு நிலையங்களுக்குப் போய் காசையும் செலவழித்து, பக்க விளைவுகளையும் இலவசமாக வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கு அதிக செலவில்லாமலே இயற்கை முறையில் வீட்டிலேயே தீர்வு காணலாம். பக்க விளைவுகள் எதுவுமே இல்லாமல் மூன்றே நாட்களில் முகம் பொலிவுடன் மிளிரும்.

hair remover

இயற்கை முறைகளில், அழகு குறிப்பாக இருந்தாலும் சரி, மருத்துவ குறிப்பாக இருந்தாலும் சரி மஞ்சளைத் தவிர்க்கவே முடியாது. ஊசிப் போடும் போது மருத்துவர்கள் முதலில் கிருமி நாசினியை தேய்ப்பது மாதிரி எல்லா வற்றிலும் மஞ்சள் முக்கியத்துவம் வாய்ந்தது. முகத்தில் உள்ள முடிகளை நீக்குவதில் மஞ்சளுக்கு பிரதான இடம் உண்டு. 
முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவினாலும் முடி வளர்ச்சி குறையும். கடலை மாவில் சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.
மஞ்சளை பப்பாளி அல்லது கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு சருமமும் மென்மையாக இருக்கும்.

hair remover

வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில், தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவிய பின்னர் ஸ்கிரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான மற்றும் பட்டுப் போன்ற சருமத்தை பெறலாம்.
2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 10 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து முடியுள்ள கை ,கால், முகப்பகுதியில் தடவி 15ல் இருந்து 20 நிமிடம் கழித்து, சுத்தமான, வெதுவெதுப்பான தண்ணீரால் மென்மையாக தேய்த்து கழுவவேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்து வர முடி நீங்குவதோடு, நிரந்தரமாகவே தேவையற்ற இடங்களில் முடியின் வளர்ச்சியும் தடைபட்டுவிடும்.

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...