தேர்தல் போல் மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் மார்க்… மத்திய பிரதேச அரசு அதிரடி

மத்திய பிரதேசத்தில் தேர்தல் போல், மது கடைகளில் மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் மார்க் செய்யப்படுகிறது.

கடந்த 4ம் தேதி முதல் நிபந்தனைகளுக்கு உள்பட்டு மதுகடைகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து பல மாநில அரசுகள் மதுகடைகளை திறந்தன. அதேசமயம் சில மாநிலஙகள் மது வாங்க வருபவர்கள் அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும், கையில் குடை வைத்திருக்க வேண்டும் விதவிதமாக உத்தரவிட்டன. மத்திய பிரதேசம் அதிலும் ஒரு படி மேலே போய் வித்தியாசமாக மது வாங்க வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியாத மையால் குறியிடுகிறது.

மது வாங்க வருபவரின் விரலில் அழியா மை வைக்கும் பணியாளர்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹோஷங்காபாத் மாவட்டத்தில்தான் மது வாங்க மதுகடைகளுக்கு வருபவர்களின் விரலில் அழியா மையால் குறியிடப்படுகிறது. இது தொடர்பாக அம்மாவட்ட கலால் அதிகாரி அபிஷேக் திவாரி கூறியதாவது: ஹோஷங்காபாத் மாவட்டத்தில் மது வாங்க மது கடைகளுக்கு வருபவர்களின் ஆள்காட்டி விரலில் அழியா மையால் குறியிடப்படுகிறது. 

மது பாட்டில்களை வாங்கி செல்லும் குடிமகன்

தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மக்களை கண்டுபிடிப்பதற்காக இநத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மது கடைகளில் உள்ள புத்தகத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது பெயர், முகவரி  மற்றும் செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். கட்டுப்படுத்துதல் இல்லாத மண்டலங்களில் 50 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எந்தவொரு கடைகளிலும் கூட்ட நெரிசல் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!