Home அரசியல் தேர்தல் நடத்துவதை தாமதிப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்: திருமாவளவன்

தேர்தல் நடத்துவதை தாமதிப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்: திருமாவளவன்

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதித்தால் அது தொகுதி மக்களை வஞ்சிக்கும் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதித்தால் அது தொகுதி மக்களை வஞ்சிக்கும் செயல் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்திருப்பதால் அந்தத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்.

அவற்றுடன் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்த 18 தொகுதிகளும் கடந்த ஓராண்டாக பிரதிநிதி இல்லாமல், மக்கள் பணி எதுவும் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளன. இந்நிலையில் அங்கு தேர்தலை நடத்த தாமதித்தால் அது அந்த தொகுதி மக்களை எல்லாம் வஞ்சிப்பதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி தேர்தல் ஜனநாயகத்தையும் சிதைப்பதாகிவிடும்.

தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு என்ற மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியது அதன் பொறுப்பாகும். ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ப தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடும்.எனவே, டிசம்பர் மாதத்திற்குள் இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கட்சியில் சுயாட்சி இல்லை.. கோவாவில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய தலைவர்கள்…

கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் எல்விஸ் கோம்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ஆம்...

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம்.. ஜனாதிபதி ஆட்சி தேவையில்லை.. பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் இயல்பான மரணத்தை விரும்புகிறோம், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதை விரும்பவில்லை என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் பட்டாச்சார்யா தெரிவித்தார். மேற்கு...

கே.சந்திரசேகர் ராவுக்கு வேறுவழியில்லை…. பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசி கட்சியுடன் கூட்டணி

ஹைதராபாத் மாநகராட்சி மேயர் பதவி வேண்டுமானால் பரம எதிரியான பா.ஜ.க. அல்லது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்தே தீர வேண்டும் என்று நிலைக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின்...

ராஜஸ்தானில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சம் பேரிடம் அபராதம் வசூலித்த போலீசார்

ராஜஸ்தானில் கடந்த 8 மாதங்களில், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கோவிட்-19 விதிமுறைகளை மீறிய 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடம் அபராதமாக மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில...
Do NOT follow this link or you will be banned from the site!