தேர்தல் செலவுக்கு ஆதார் கார்டை வைத்து கொண்டு 50 லட்சம் லோன் கேட்ட சுயேட்சை வேட்பாளர்: ஆடிப்போன வங்கி ஊழியர்கள்!?

தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர் ஒருவர்  வங்கியில் ஆதார் அட்டையை அடமானம் வைத்து 50 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்: தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளர் ஒருவர்  வங்கியில் ஆதார் அட்டையை அடமானம் வைத்து 50 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ec

மக்களவை தேர்தலையொட்டி கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியும், மற்ற கட்சிகளை  விமர்சித்தும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் சுயேட்சை வேட்பாளர்களோ நூதன முறையில் பிரசாரம் செய்து கவனம் பெற்று  வருகின்றனர். அதே சமயம் சுயேட்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளும்  வினோதமாக இருக்கிறது.

அந்த வரிசையில்  மக்களவைத் தேர்தலில் அகிம்சா சோஷலிஸ்ட் என்ற கட்சி சார்பில்  ரமேஷ் என்பவர் நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வரும் இவர்  கதராடை அணிந்து கொண்டு காந்தி தோற்றத்தில் வலம் வருகிறார். 

namakkal

இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள அரசு வங்கி  ஒன்றிற்கு சென்ற இவர், அங்கிருந்த வங்கி அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நான் காந்தியக் கொள்கைகளைத் தவறாமல் பின்பற்றுபவன். முழு நேர தொழிலாக விவசாயம் செய்வதோடு, யோகா ஆசிரியராகவும் இருக்கிறேன். நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறேன்.தேர்தலில் போட்டியிடுபவர் ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

sbi

அதனால் தேர்தல் செலவுகளுக்காக  ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. இந்த தொகையை வழங்கினால் தேர்தலில் வெற்றிபெற்று ஒரு பைசா கூட பாக்கி இல்லாமல் கடனை செலுத்தி விடுவேன். பணத்தை வாங்கி கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி விட மாட்டேன். என் பாஸ்போர்ட்டை  இதில் இணைத்துள்ளேன். அதனால் அரசு வழங்கிய ஆதார் அட்டையை அடையாளமாகக் கொண்டு எனக்கு 50 லட்சம் கடன் வழங்கக் கோருகிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக வீடு , தொழில், வாகனம், கல்வி உள்ளிட்ட சில காரணங்களுக்காக வங்கியில் கடன் அளிப்பது வழக்கம்.ஆனால்  தேர்தல் செலவுக்காகக் கடன் கேட்டிருப்பது சற்றே வித்தியாசமான அணுகுமுறையாகத் தான் உள்ளது. 

இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்க போகுதோ!?

இதையும் வாசிக்க: அஜீத் பாணியில் வெளிமாநிலங்களுக்கு ஷிஃப்ட் ஆகும் தளபதி 63

Most Popular

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

ஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...

‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின்...

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

இன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல்...
Do NOT follow this link or you will be banned from the site!