ஷேர் மார்க்கெட் விர்ர்ர்ர்

 

ஷேர் மார்க்கெட் விர்ர்ர்ர்

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு, முந்தைய தேர்தலைவிடவும் அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், சென்செக்ஸ் எகிறி அடித்திருக்கிறது

பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிக்கு, முந்தைய தேர்தலைவிடவும் அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், சென்செக்ஸ் எகிறி அடித்திருக்கிறது. இன்று ஒரே நாளில் 1422 புள்ளிகள் உயர்ந்து, 39,352ல் நிலைகொண்டது. இதற்கு முன்பு, 2009 ஆம் ஆண்டு மே மாதம், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு பெற்ற நாளில், சென்செக்ஸ் ஒரே நாளில் 2100 புள்ளிகள் உயர்ந்ததே, முந்தைய சாதனையாகும்.

modi

கருத்துக்கணிப்புதானே வெளியானது? தேர்தல் முடிவு அல்லவே, பங்குச்சந்தை ஏன் கருத்துக்கணிப்பை இவ்வளவு நம்புகிறது, பாஜக என்றால் பங்குச்சந்தைக்கு அவ்வளவு பிரியமா என்றால், ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கிய காரணம், பாஜக தனிப்பெரும் கட்சியாக மட்டுமின்றி, கூட்டணி கட்சிகள் தயவின்றியே ஆட்சி அமைக்க இருக்கிறது என்ற நம்பிக்கையால்தான்.

modi

பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, பாஜகவோ, காங்கிரசோ, யார் ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகள் பிக்கல்  பிடுங்கலின்றி ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை, இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் லாபம் தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீங்களாச்சும் நல்லா இருங்கப்பா