Home சினிமா தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறாரா 'தல'?

தெரிந்தே ரிஸ்க் எடுக்கிறாரா ‘தல’?

பாலிவுட்டில் மெகா ஹிட்டாகிய ‘பிங்க்’ பட ரீமேக்கில் நடிப்பது என்பதை தெரிந்து தான் செய்கிறாரா அஜித் என்ற கேள்வி எழுந்துள்ளது

பாலிவுட்டில் மெகா ஹிட்டாகிய ‘பிங்க்’ பட ரீமேக்கில் நடிப்பது என்பதை தெரிந்து தான் செய்கிறாரா அஜித் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரம் தான். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதே கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான் பெரிய கேள்வி. 
அதுவும் விஸ்வாசம் போன்ற ஒரு மாஸ் படத்தை பார்த்த பிறகு ஏற்பார்களா? மாற்றம் என்ன தான் ஹெச். வினோத் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்தாலும் கருவை மாற்ற முடியாது. கதைக்கரு படி அந்த 3 பெண்களை சுற்றி தான் கதை நகரும். படம் முழுக்க ரொம்பவே சீரியஸாக இருக்கும். இதில் காமெடி, காதல் காட்சிகள், ஓபனிங் பாடல் எல்லாம் வைக்க முடியாது. 

thala

அமிதாப் பச்சனுக்கு வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரம் செட்டாகலாம். ஆனால் விஸ்வாசம் படத்தில் மாஸ் காட்டிவிட்டு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது அஜித்துக்கு ஒத்து வராது. அவரது கதாபாத்திரத்தை குறை சொல்லவில்லை. ஆனால் அதுவல்ல அவரின் ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது. ரசிகர்கள் கதையின் வேகம், அஜித்தின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்ப்பது அல்ல. 

பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம் என்று ஐடியா கொடுத்ததே அஜித் தான். படம் நிச்சயம் அருமையான படம். ஆனால் அதில் அஜித் நடிப்பது? என்னமோ தல, வினோத் உங்கள் கதாபாத்திரத்தை மாற்றினாலும் அதை ரசிகர்கள் ஏற்க வேண்டும். படம் நன்றாக வந்தால் மகிழ்ச்சி.

மாவட்ட செய்திகள்

Most Popular

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மதிமுக, விசிக!

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுகவுடன் விசிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்...

அதிமுகவில் 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்… சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அப்போதே முதல்வரும் துணை முதல்வரும் தங்களது ஆஸ்தான தொகுதியான...

சாமிதோப்பு அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அடுத்த ரோஜாபாளையத்தை சேர்ந்தவர்...
TopTamilNews