தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இதனால் வெப்பநிலை சற்று குறைவாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

representative image

மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும். மதுரை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொது மக்கள் வெளியே செல்வதையும், விவசாயிகள், தொழிலாளர்கள் வெயிலில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரக்கைவிடுத்துள்ளது.

Most Popular

“குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் 9 பால் பாக்கெட்டுகளும் சிதறிக் கதறுகிறது” : எஸ்.வி. சேகரை கலாய்க்கும் தயாநிதி மாறன்

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.வி.சேகர், “நீங்கள் நன்றாக இந்தி பேசுகிறீர்கள். பின்னர் ஏன் தமிழ்நாட்டு...

கணவனை பிரிந்தார் ,பெற்ற குழந்தையை விற்றார் -மும்பை போகும் கனவில் ஒரு பெண் செய்த வேலைய பாருங்க

கிராமத்தில் வாழ விரும்பாத ஒரு பெண்,மும்பை போகும் ஆசையில்  தன்னுடைய கணவனை பிரிந்து ,பெற்ற குழந்தையை விற்ற போது பிடிபட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹபீப்நகர் பகுதியில் 22 வயதான ஷேக் சோயா கான் என்ற...

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த...

சென்செக்ஸ் 433 புள்ளிகள் வீழ்ச்சி…. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி நஷ்டம்

கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்தது, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோமோட்டோ கார்ப், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லாதது, அமெரிக்க டாலருக்கு...
Do NOT follow this link or you will be banned from the site!