Home விளையாட்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!!

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!!

தென்னாப்பிரிக்கா இந்தியா இரு அணிகள் மோதும் டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

bcci

மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியா திரும்புகிறது. இந்தியா திரும்பிய ஒரே வாரத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஆட இருக்கிறது. 

செப்டம்பர் 15ம் தேதி முதல் டி20 போட்டி துவங்குகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. மேலும், இதனை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பட்டியலிட்டார். 

dhoni

இரண்டு மாதங்கள் இராணுவ பணிக்காக சென்றுள்ள முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் இடம்பெறவில்லை. அதேபோல் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் உலகின் நம்பர் 1 வீரரான பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டியில் ஆடும் இந்திய வீரர்களின் பட்டியல்:

bumrah

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ரூணல் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அஹமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

மாவட்ட செய்திகள்

Most Popular

காஷ்மீரில் கல் வீசுதல், பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்பம் யாரும் ஈடுபடுவதில்லை.. மேஜர் ஜெனரல் தகவல்

வடக்கு காஷ்மீரில் கல் வீசுதல் மற்றும் பந்த் போன்ற நடவடிக்கைகளில் இப்போது யாரும் ஈடுபடுவதில்லை என்று மேஜர் ஜெனரல் எச்.எஸ். ஷஹி தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு...

திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். 12 ஆழ்வார்களில் ஒரே பெண் இவர்தான். மிகச்சிறந்த பெருமாள் பக்தை. தோட்டத்தில் பச்சிளம் குழந்தையாக பெரியாழ்வாரால் கண்டுபிடிக்கப்பட்டவர் ஆண்டாள். மிகச்சிறந்த விஷ்ணு பக்தையாக...

நிச்சய உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள் எது என்று ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆரோக்கியமில்லாத உணவு, சாப்பிட்டால் நிச்சயம் உடல்நல குறைபாட்டை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சில உணவுகள் பற்றித் தெரியுமா... தினமும்...

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும்.. ஒரே நாளில் 475 சட்டமன்ற, 2 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்

ஏப்ரல் 6 மிகவும் பரபரப்பான தேர்தல் நாளாக அமையும். ஏனென்றால் அன்று புதுச்சேரி மற்றும் 4 மாநிலங்களில் மொத்தம் 475 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 எம்.பி. தொகுதிகளுக்கு தேர்தல்...
TopTamilNews