Home இந்தியா துரத்திய சாதி... தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த மகன்

துரத்திய சாதி… தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த மகன்

உயிரிழந்த தனது தாயை சைக்கிளில் கொண்டு சென்று மகன் அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துரத்திய சாதி... தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த மகன்

புவனேஸ்வர்: உயிரிழந்த தனது தாயை சைக்கிளில் கொண்டு சென்று மகன் அடக்கம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45). தனது கணவர் இறந்த பின் 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற அவர் தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சரோஜ் முயன்றார். ஆனால் அவர் தாழ்ந்த சாதி என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முன்வரவில்லை.

இதனையடுத்து, மனம் தளராத சரோஜ், தனது தாயின் உடலை சைக்கிளின் பின்னால் வைத்து 4-5 கிமீ நடந்தே உடலை காட்டுக்குக் கொண்டு சென்றார். போகிற வழியில், இது யார் என்று கேட்டவர்களுக்கு உடைந்த குரலில், ’எனது அம்மா’ என்று பரிதாபமாக கூறிவிட்டு யாருடைய உதவியுமின்றி தனியாளாக அவரை அடக்கம் செய்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துரத்திய சாதி... தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த மகன்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கமலும் சீமானும் சேர்ந்தால் அரசியலில் மாஸ் காட்டலாம்” – புது ரூட்டை பிடிக்கும் கருணாஸ்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையிலிள்ள அவரது அலுவலகத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். இதற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், "கமல்கோவை தெற்கு தொகுதியில்...

பேய் பிடித்ததாக 7 வயது சிறுவன் அடித்துக் கொலை… தாய் உள்பட 3 பெணகள் கைது!

திருவண்ணாமலை ஆரணி அருகே பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற தாய் மற்றும் அவரது சகோதரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்க சிபிசிஐடி போலீசார் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷில் ஹரி பள்ளியில்...

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...
- Advertisment -
TopTamilNews