Home தமிழகம் துப்பட்டாவை கழுத்தில் கட்டிக்கொண்டு விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

துப்பட்டாவை கழுத்தில் கட்டிக்கொண்டு விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

சிறுவன் உசேனின் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது.  இதனால் சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான். 

துப்பட்டாவை கழுத்தில் கட்டிக்கொண்டு விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!

கோவை மாவட்டம்  உக்கடம்  ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்தவர் சதாகத்துல்லா. இவரது  இவரது மகன் காஜா உசேன். 9 வயதான காஜா உசேன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

ttn

இந்நிலையில் நேற்று முன்தினம்  மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன், தாயின் துப்பட்டாவை எடுத்து ஜன்னலில் ஒருமுனையை  கட்டிவிட்டு மறுமுனையை  கழுத்தில் காட்டியவாறு கட்டிலில் விளையாடியுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிலிலிருந்து  கீழே தவறிவிழுந்துள்ளான். இதில் சிறுவன் உசேனின் கழுத்து இறுக்கப்பட்டுள்ளது.  இதனால் சிறுவன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளான். 

ttn

இதையடுத்து சிறுவன் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடப்பதை பார்த்த அவரின் பெற்றோர், உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால்  சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உசேன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து   உக்கடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

துப்பட்டாவை கழுத்தில் கட்டிக்கொண்டு விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மோடிக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி!

தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டுமென பிரதமர் மோடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை எதிர்பாராத...

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்கும் தமிழ்நாடு அரசு!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை அறிவியலாளர்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை...

கொரோனாவால் இறந்த மூதாட்டி : தகனம் செய்வதற்கு முன் எழுந்ததால் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் இறந்ததாக மூதாட்டி ஒருவரை தகனம் செய்ய சென்ற போது எழுந்து உட்கார்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நிவாரண நிதி வழங்கிய ராஜீவ் காந்தி கொலையில் கைதாகிய ரவிச்சந்திரன்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை...
- Advertisment -
TopTamilNews