துணை முதல்வர் ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக நோய் தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.