Home தொழில்நுட்பம் தீபாவளி பண்டிகை கால விற்பனையில் சாதனை படைத்த சியோமி ஸ்மார்ட்போன்கள்!

தீபாவளி பண்டிகை கால விற்பனையில் சாதனை படைத்த சியோமி ஸ்மார்ட்போன்கள்!

தீபாவளி பண்டிகை கால விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்கள் சாதனை படைத்துள்ளன.

டெல்லி: தீபாவளி பண்டிகை கால விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்கள் சாதனை படைத்துள்ளன.

தீபாவளி விழாக்காலம் தற்போது முடிவடைந்து விட்ட நிலையில், இந்த பண்டிகை காலத்தில் தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையில் படைத்த சாதனை தொடர்பாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அமேசான், ஃபிளிப்கார்ட், எம்.ஐ ஸ்டோர் போன்ற பல்வேறு தளங்களில் விற்பனை செய்யப்பட்ட சியோமி சாதனங்களின் எண்ணிக்கை சுமார் 8.5 மில்லியன்கள் ஆகும்.

இந்த பண்டிகை கால விற்பனையில் அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் சியோமி நிறுவனமே நம்பர் ஒன்னாக இருந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டிவி, பவர் பேங்க், ஹோம் செக்கியூரிட்டி, ஏர் பியூரிஃபையர் என பல்வேறு சாதனங்களில் சியோமி நிறுவன பொருட்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்குள் 6 மில்லியன் சியோமி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது.

mi

சியோமி இந்த மைல்கல் சாதனையை அக்.9 முதல் நவம்.8ஆம் தேதிக்குள் அடைந்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. அதேசமயம் கடந்த வருடம் 4 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது. 4 லட்சம் எம்.ஐ எல்இடி டிவி, எம்.ஐ எக்கோ சிஸ்டம் மற்றும் பிற சாதனங்கள் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சியோமி இந்தியாவின் ஆன்லைன் விற்பனையின் தலைமை நிர்வாகி ரகு ரெட்டி கூறுகையில், “விழாக்கால சலுகை விற்பனை இந்தியாவில் எப்போதும் சிறப்பான முறையில் நடைபெறும். கடந்த வருடம் 4 மில்லியன் ஸ்மார்ட்போன்களும் இந்த வருடம் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

எம்.ஐக்கு இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருக்கும் ரசிகர் கூட்டத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளோம். இதுபோன்ற வரவேற்பை வரும்காலத்தில் எங்கள் நிறுவனத்தின் நம்பகமான பொருட்களால் பெறுவோம்” என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன என அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க...

மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

மகாராஷ்டிராவில் மின் கட்டணத்தை குறைக்க அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் தயாராக உள்ளதாக நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார். மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா...

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கை மாற்றிய ஒரே ஒரு போட்டோ

கர்நாடகாவில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை விற்பனை செய்பவரின் வாழ்க்கையை ஒரே ஒரு புகைப்படம் மாற்றியுள்ளது. பெங்களூருவில் சாலையோரத்தில் மருத்துவ மரக்கன்றுகளை விற்பனை செய்து வருபவர் ரேவண்ணா சித்தப்பா....

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மஞ்சள் உலோகமான...
Do NOT follow this link or you will be banned from the site!