Home சினிமா தீபாவளியன்று எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு..

தீபாவளியன்று எந்த படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதிக்கவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு..

விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும், கார்த்திக் நடிப்பில் கைதி திரைப்படமும் வரும் வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும், கார்த்திக் நடிப்பில் கைதி திரைப்படமும், விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன் திரைப்படமும் வரும் வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. இந்த திரைப்படங்களின் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் சிலர் டிக்கெட்டுகளை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னிட்டு இந்த திரைப்படங்கள் வெளியாவதால், அரசு விடுமுறையான தீபாவளியன்று படத்தைப் பார்த்து விடலாம் என்று மற்ற சிலர் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு தீபாவளிக்குச் சிறப்புக் காட்சிகள் ரத்து எனத் தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

Movies

இது குறித்து இன்று எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பிகில் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் பிகில் படத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காதது போலச் சித்தரிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். 

Kadambur raju

மேலும், தீபாவளியைப் பயன்படுத்தி திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட்டின் விலையை உயர்த்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை ரசிகர்களும் மக்களும் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கிலே இந்த முடிவு செயல்படுத்தப்பட்டது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

மாவட்ட செய்திகள்

Most Popular

“எத்தன சீட்டு கொடுத்தாலும் ஏத்துக்குறோம்… சூரியன் சின்னத்துக்கும் ஓகே” – வேல்முருகன் ஓபன் டாக்!

பெரிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக ஒருவழியாக முடித்துவிட்டது. தற்போது சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சிறிய கட்சிகளைப் பொறுத்தவரை பெரிதாகப் பேரம் பேசாமல் கொடுக்கும் இடங்களைப் பெற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே...

சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய தம்பதி…

ஈரோடு சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை...

சரத்குமார் கட்சிக்கு இத்தனை தொகுதியா?.. வாய் பிளக்கும் கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே எஞ்சியிருக்கின்றன. வரும் 15ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக தொகுதி பங்கீடு...

கருப்பு-நீல-சிவப்பு சட்டைகளே மீண்டும் வெல்லும் – திருமுருகன் காந்தி முழக்கம்

அறவழிப் போரட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கக்கோரி திருச்சியில் மக்கள் இயக்கங்களின் உரிமை முழக்க பேரணி மாநாடு நடைபெற்றது.
TopTamilNews