Home தமிழகம் தீபாவளிக்கு ரூ.385 கோடி வசூலுக்கு எடப்பாடி அரசு திட்டம்! வெளங்கிடும் தமிழ்நாடு!

தீபாவளிக்கு ரூ.385 கோடி வசூலுக்கு எடப்பாடி அரசு திட்டம்! வெளங்கிடும் தமிழ்நாடு!

இந்தியா ஒளிர்கிறது என்பதைப் போல இனி தமிழகம் தலைநிமிர்கிறது என்று தேர்தல் நேர வாக்குறுதிகளில் ஆட்சியின் சாதனையாக இதையும் சேர்த்துச் சொல்வார்கள் போல…

தீபாவளிக்கு ரூ.385 கோடி வசூலுக்கு எடப்பாடி அரசு திட்டம்!  வெளங்கிடும் தமிழ்நாடு!

தமிழகம் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது என்று யார் சொன்னாலும் இனி நம்பவே கூடாது. இந்தியா ஒளிர்கிறது என்பதைப் போல இனி தமிழகம் தலைநிமிர்கிறது என்று தேர்தல் நேர வாக்குறுதிகளில் ஆட்சியின் சாதனையாக இதையும் சேர்த்துச் சொல்வார்கள் போல…

Tasmac

மாநிலத்தில் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. எந்தவொரு மக்களுக்கு பயனளிக்கும் காரியத்திற்கும் இப்படி எல்லாம் திட்டம் போட்டு செயல்படுத்த மாட்டார்கள் போல. ஆனால், சரக்கு விஷயத்தில் மட்டும் அரசு தீவிரமாய் இயங்கி வருகிறது. பண்டிகை காலங்கள் எல்லாம் இன்னும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். நாடு முழுவதும் தீபாவளி ஷாப்பிங் களை கட்டியுள்ள நிலையில், இதை கல்லா கட்டிக் கொள்வதற்கான காலமாக பார்க்கிறது எடப்பாடி அரசு. தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை முன்கூட்டியே இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tasmac

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் அதற்கு முந்தைய 3 நாட்களும் கொண்டாட்ட நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த நாட்களில் யாரும் எதிர்பாராத வகையில் ரூ.602 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்தது. அதாவது கூடுதலாக 34 சதவீதம் மது விற்பனையாகி இருந்தது.

TN Govt.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை(27-ந்தேதி) வருகிறது. அரசு வார விடுமுறை நாளிலேயே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதால் கொண்டாட்ட நாட்களின் எண்ணிக்கையும் குறைகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களே கொண்டாட்ட நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களில் மட்டும் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

25-ந்தேதி ரூ.80 கோடிக்கும், 26-ந்தேதி ரூ.130 கோடிக்கும், தீபாவளி நாளான 27-ந்தேதி ரூ.175 கோடிக்கும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மதுக்கடைகளுக்கும், 15 நாட்களுக்கு தேவையான மது வகைகளை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சரியான நேரத்தில் கடைகளை திறந்து குறிப்பிட்ட நேரத்தில் மூடவேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டு கடைகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரூ.385 கோடி வசூலுக்கு எடப்பாடி அரசு திட்டம்!  வெளங்கிடும் தமிழ்நாடு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை...
- Advertisment -
TopTamilNews