Home இந்தியா தீட்டு என்ற சாமியாரின்  வாய்க்கு பூட்டு -மாதவிடாய் நின்ற பெண்களின் 'பீரியட் பீஸ்ட்'....

தீட்டு என்ற சாமியாரின்  வாய்க்கு பூட்டு -மாதவிடாய் நின்ற பெண்களின் ‘பீரியட் பீஸ்ட்’….

புதுடெல்லியில்  குடும்ப மேலாண்மை குறித்த சொற்பொழிவின் போது, சுவாமிநாராயண் பூஜ் மந்திரைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி, ஒரு பெண் மாதவிடாய் இருக்கும்  போது கணவருக்கு உணவு சமைத்தால், அவர் ஒரு முறையற்ற பெண்ணாக மறுபிறவி எடுப்பார் என்று கூறினார்.

புதுடெல்லியில்  குடும்ப மேலாண்மை குறித்த சொற்பொழிவின் போது, சுவாமிநாராயண் பூஜ் மந்திரைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணாஸ்வரூப் தாஸ்ஜி, ஒரு பெண் மாதவிடாய் இருக்கும்  போது கணவருக்கு உணவு சமைத்தால், அவர் ஒரு முறையற்ற பெண்ணாக மறுபிறவி எடுப்பார் என்று கூறினார். இதனால் குஜராத்தில் ஸ்ரீ சஜ்ஜானந்த் பெண்கள் நிறுவனத்தின் பல  பெண்கள் கூட மாதவிடாய் இருக்கிறதா என சோதனை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானது .அந்த வீடியோ வைரலானதால் அந்த கல்லூரி முதல்வர் மற்றும் சில நிர்வாகிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

period-feast

ஆணாதிக்கத்தோடு கூறிய அந்த சாமியாரின் கருத்தை உடைப்பதற்காகவும் ,மூடநம்பிக்கையை ஒழிக்கவும்  ஞாயிற்றுக்கிழமை, டெல்லியின் மயூர் விஹாரில் சச்சி சஹேலி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மாதவிடாய் நின்ற பெண்களை வைத்து  ‘பீரியட் விருந்து’ சமைத்து சுமார் 300 பேருக்கு உணவளிக்கும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
டெல்லியின் மயூர் விஹாரில் 28 மாதவிடாய் நின்ற பெண்கள் சேர்ந்து  உணவு சமைத்து, 300 பேருக்கு விருந்து  வைத்து அந்த சாமியார் கூறிய கருத்துக்கு  சவால் விட்டனர்.

period-feast-90

மாதவிடாயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகளை ஒழிக்க  உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்

மாவட்ட செய்திகள்

Most Popular

டிராக்டர் திருட்டு – போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

திருச்சி சிறுகனூர் அருகே டிராக்டர் திருட்டு வழக்கில் தேடப்பட்ட இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

பத்து நாட்களாக திமுக படுத்தி எடுத்தும் பாமக பதில் சொல்லாமல் இருக்கிறது. திமுகவும் விடுவதாக இல்லை போலிருக்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. ஆனால்,...

‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு!

புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில்...

’நாங்களும் இந்துகளே’ திமுகவைச் சொல்ல வைத்து விட்டதா பாஜக!

திமுகவின் தலைவர்கள் சமீபகாலமாக பேசிவரும் பேச்சுகள் திமுகவின் அரசியல் பாதை புதிய திசையில் பயணிக்க வருகிறதோ என்ற எண்ணத்தை பலருக்கும் உருவாக்கியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர்...
Do NOT follow this link or you will be banned from the site!