Home தேர்தல் செய்திகள் தி.மு.க. தேர்தல் அறிக்கை 2019: நீட் தேர்வு ரத்து; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; அதிரடி கிளப்பும் ஸ்டாலின்

தி.மு.க. தேர்தல் அறிக்கை 2019: நீட் தேர்வு ரத்து; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; அதிரடி கிளப்பும் ஸ்டாலின்

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையைக்  கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை 2019: நீட் தேர்வு ரத்து; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; அதிரடி கிளப்பும் ஸ்டாலின்

சென்னை: மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையைக்  கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

நாடாளுமன்ற  தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐ.ஜே.கே., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. முன்னதாக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை திமுக வெளியிட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக இன்று வெளியிட்டது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முக ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.அவருடன் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தேர்தல் அறிக்கை சிறப்பம்சங்கள்:

 • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கச் சட்டத்திருத்தம்
 • கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்படும்
 • மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்
 • பொருளாதாரத்தைச் சீரமைக்கச் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
 • சமையல் எரிவாயு மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் நிலை மாற்றப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்
 • நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
 • மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை
 • தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
 • இலங்கை அகதிகளுக்கு மேலும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும்
 • மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
 • கீழடியில் அகழாய்வுகள் தொடரும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்
 • காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்
 • கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான நிவாரணத்திற்கு நிதிநிலையில் அரை விழுக்காடு நிதி ஒதுக்கப்படும்
 • கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்
 • சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை அடிப்பவர்களைத் தண்டிக்கத் தனிச்சட்டம்
 • நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும்
 • குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்
 • மாணவர்களின் கல்விக் கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை
 • தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட ஒரு கோடி பேர் சாலைப்பணியாளர்களாக நியமிக்கப்படுவர்
 • 10ம் வகுப்பு வரை படித்த சுமார் 50 லட்சம் பெண்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்
 • உரிமம் முடிந்த பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்
 • கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
 • சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்
 • பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை
 • கேபிள் கட்டணம் முன்பு இருந்தது போல் குறைக்கப்படும்
 • பாலியல் தொழில், உடல் உறுப்புகளுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும்
 • பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
 • மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம்
 • கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும் – அங்கேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும்

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதுள்ளது என்றும்  தமிழகத்தின் பொருளாதாரம் சரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை 2019: நீட் தேர்வு ரத்து; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை; அதிரடி கிளப்பும் ஸ்டாலின்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்!

நீண்ட இடைவெளிக்கு பின் திரையுலகில் மீண்டும் நடிக்கவிருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்சை அரசன் 23-ஆம்...

நானும் என் மகனும் இன்று சண்டை போடுவோம் நாளை கட்டிப்பிடிச்சுப்போம்- எஸ்.ஏ.சந்திரசேகர்

எஸ்.ஏ.சந்திரசேகரின் நான் கடவுள் இல்லை படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,...

டெல்லி வரும் தமிழக மக்கள் எனது அரசு வீட்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்- எம்.பி அதிரடி

மத்திய அரசு தனக்கு டெல்லியில் ஒதுக்கிய வீட்டை தமிழக மக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சேகர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
TopTamilNews