Home சினிமா திரும்ப வரணும், பழைய லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தியா திரும்ப வரணும்!

திரும்ப வரணும், பழைய லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தியா திரும்ப வரணும்!

திரும்பவும் முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தவருக்கு, ரீஎன்ட்ரியே மகேஷ் பாபுவின் “சரிலேறு நீக்கிவேறு” படம் கமிட்டாகியிருக்கிறது. அரசியலில் உடம்பு வளையாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தே 5 வருடங்களை என்ன 50 வருடங்கள்கூட ஓட்டமுடியும், சினிமாவில் முடியுமா? அதனால், உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள படத்துக்கு கையெழுத்து போட்டவுடனேயே ஜிம் ஒன்றில் சேர்ந்துவிட்டார்.

சினிமாவில் இருந்து விஜயசாந்தி ரிடையர் ஆகும் நேரத்தில் சினிமாவுக்குள் வந்த நடிகை, ரோஜா இப்போது ஆந்திராவின் துணை முதலமைச்சர் பந்தயத்தில் இருக்கிறார். இப்போது இல்லாவிட்டாலும், அடுத்த ரவுண்டில் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி, விஜயசாந்திக்கு கட்டக்கடேசி தங்கைதான் ரோஜா. ஆனால், ரோஜா இன்று ஆந்திராவின் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர். ஆனால், ஒருகாலத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக சினிமாவில் வலம்வந்த விஜயசாந்திக்கு பலரையும்போல அரசியல் வெற்றி மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

Vijayashanthi

பாஜகவில் சேர்ந்து, பிறகு தனிக்கட்சி கண்டு, அதன்பின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் சேர்ந்து எம்.பியாகி, பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து இப்போது தோல்விமுகம் கண்டு துவண்டுபோய் இருக்கிறார் விஜயசாந்தி. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா?

Vijayashanthi

திரும்பவும் முதலில் இருந்தே ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தவருக்கு, ரீஎன்ட்ரியே மகேஷ் பாபுவின் “சரிலேறு நீக்கிவேறு” படம் கமிட்டாகியிருக்கிறது. அரசியலில் உடம்பு வளையாமல் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தே 5 வருடங்களை என்ன 50 வருடங்கள்கூட ஓட்டமுடியும், சினிமாவில் முடியுமா? அதனால், உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள படத்துக்கு கையெழுத்து போட்டவுடனேயே ஜிம் ஒன்றில் சேர்ந்துவிட்டார். வாங்க நீங்க பழைய விஜயசாந்தியா திரும்ப வரணும்!

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews