Home தமிழகம் திரும்பத் திரும்ப ஜாமீன் கேட்டதால் கடுப்பான நீதிமன்றம் : அபராதம் விதித்து உத்தரவு

திரும்பத் திரும்ப ஜாமீன் கேட்டதால் கடுப்பான நீதிமன்றம் : அபராதம் விதித்து உத்தரவு

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முதன்முதலாகத் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முதன்முதலாகத் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருந்தது அம்பலமானது. இதனையடுத்து, உதித் சூர்யாவும் அவரது தந்தையும் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

Court

திரும்பவும் கடந்த மாதம் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். அதில், மாணவர் உதித் சூர்யாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, உதித் சூர்யாவின் தந்தை தான் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் முக்கிய குற்றவாளி என்பதால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேஷ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மீண்டும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். திரும்பத் திரும்ப ஜாமீன் கேட்டதால் கடுப்பான நீதிமன்றம் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.  

மாவட்ட செய்திகள்

Most Popular

பிரதோஷம் – பெரிய கோயில் நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நேற்று மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேம் மற்றும் தீபா ஆராதனை நடைபெற்றது. இதனையொட்டி, மகா நந்திகேசுவரருக்கு கோயில்...

‘மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார்

மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வடகிழக்கு பருவமழை...

ஒரே நாளில் 5 லட்சம் புதிய நோயாளிகள் – உலகளவில் கொரோனா

உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இது பெரும் ஆபத்தான சூழல். அக்டோபர் 29-ம் தேதி நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில்...

பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றத்தை ரத்துசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றத்தில் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சுவரொட்டிகள் மூலம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம்...
Do NOT follow this link or you will be banned from the site!