திருமணம் முடிந்த சில மணிநேரத்தில் மரத்தில் பிணமாக தொங்கிய மணமகன்…அதிர்ச்சியில் காதல் மனைவி!

அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். 

உத்தரப்பிரதேசம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்   துஷ்யந்த் கிரி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை  காதலித்து நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த அவர், அங்கிருந்த தேநீர்  கடையில்  வண்டியை நிறுத்துமாறு கூற குடும்பத்தினர் அனைவரும் இறங்கி டீ குடித்துள்ளனர். ஆனால்  திடீரென்று  மணமகன்    துஷ்யந்த் கிரியை காணவில்லை என்று தெரிகிறது. இதனால் உறவினர்கள் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். 

ttn

இதனால் மணமகளை பரேலியில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டிற்கு திருப்பி அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணமகன் துஷ்யந்த் கிரியை தேடியுள்ளனர். அதில் டீ கடையிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள மரத்தில் துஷ்யந்த் கிரி தூக்கில் பிணமாக தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து கூறியுள்ள பக்காபா காவல் நிலைய ஆய்வாளர் சுரேந்திர பால் சிங் கூறும் போது, துஷ்யந்த் கிரி  உடலை கைப்பற்றினோம். ஆனால்  அவர் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை. இருப்பினும் நாங்கள்  அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். அதில் அவர் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது’ என்றார். 

ttn

அதேபோல் துஷ்யந்தின் சகோதரர் சிவயந்த்தோ, ‘நாங்கள் ஒரு சாலையோர உணவகத்தில் நிறுத்தினோம், அங்கு துஷ்யந்த் தேநீர் ஆர்டர் செய்தார், ஆனால் அவர் திடீரென்று காணாமல் போனார். நாங்கள் அவரைத் தேட முயன்றோம். ஆனால்  அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனால்  நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டோம். பின்னர் தான்  போலீசார் துஷ்யந்த் தற்கொலை செய்துகொண்டதைத் தெரிவித்தனர்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

துஷ்யந்த் தற்கொலை செய்து கொண்ட காரணம்  எனக்கு தெரியவில்லை. அவர் திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியாகவே இருந்தார் என்று அவரது காதல் மனைவி ஆஷா தெரிவித்துள்ளார். துஷ்யந்த்தின் இந்த தற்கொலை மணமக்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...