Home இந்தியா திருமணம் நின்று போன சோகத்திலும் மாணவிக்கு உதவிய மணமகன்.. குவியும் பாராட்டுக்கள்!

திருமணம் நின்று போன சோகத்திலும் மாணவிக்கு உதவிய மணமகன்.. குவியும் பாராட்டுக்கள்!

இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை திருமணம் ஆக இருந்த நிலையில், ஊரடங்கால் அந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுதேவ். இவருக்கு கடந்த வியாழக்கிழமை காலை திருமணம் ஆக இருந்த நிலையில், ஊரடங்கால் அந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  அந்த சோகத்திலும், அவசரமாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய மாணவிக்கு உதவியிருக்கிறார் சுதேவ். 

ttn

திருச்சி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஜென்மா, குரூப் டெஸ்டுக்கு படிப்பதற்காக மார்ச் மாதம் குன்னம்குளத்தில் உள்ள அவரது தோழி வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் சென்ற சில நாட்களிலேயே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு விட்டதால் அவரால் வீட்டுக்கு செல்ல முடியவில்லையாம். இதனிடையியே ஜென்மாவின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் ஜென்மா வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

ttn

ஜென்மா வீடு திரும்ப அவரது தந்தை திருச்சூர் பஞ்சாயத்து உறுப்பினர் உதவியை நாடியதால், அவர் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளார். அதில் சுதேவ் அவரது நண்பர்களுடன் ஜென்மாவை அழைத்துக் கொண்டு காலை 11 மணிக்கு அங்கிருந்து கிளம்பி மாலை 3 மணிக்கு திருச்சிக்கு வந்து சேர்ந்துள்ளனர். சுதேவின் இந்த உதவிக்காக அவருக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கின் போது குறைவாக இருந்த கொரோனா பரவல் தற்போது பன்மடங்கு அதிகரித்திருக்கிறது....

“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஆயுதபூஜையை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விவசாயிகளின்...

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை சேந்தவர் பேக்கரி உரிமையாளர் சக்கரபாணி. இவர் கர்நாடக...

சென்னை அணிக்கு வந்தது‘ஸ்பார்க்’… பெங்களூரை வீழ்த்தி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 44-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. பெங்களூர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை...
Do NOT follow this link or you will be banned from the site!