Home குற்றம் உள்ளூர் திருமணமான மூன்றே மாதத்தில் நடந்த விபரீதம்: காதல் மனைவியை குத்தி கொன்ற கணவன்; அதிர்ச்சி ரிப்போர்ட் !

திருமணமான மூன்றே மாதத்தில் நடந்த விபரீதம்: காதல் மனைவியை குத்தி கொன்ற கணவன்; அதிர்ச்சி ரிப்போர்ட் !

திருமணமான மூன்றே மாதத்தில் காதல் மனைவியை ஒருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: திருமணமான மூன்றே மாதத்தில் காதல் மனைவியை ஒருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கத்தை சேர்ந்த  சங்கர்- சரிதா தம்பதிக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். சந்தியாவும் அப்பகுதியை சேர்ந்த  எலக்ட்ரீஷியனாநா அருள்குமார் என்பவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம்  திருமணம் நடைபெற்றுள்ளது. 

 

marrige

திருமணத்திற்குப் பிறகு சந்தியாவின் வீட்டிலேயே அருள் குமார் வசித்து வந்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சந்தியா மீது அருள்குமாருக்கு சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். 

husband

இந்நிலையில்  வழக்கம்போல் இன்று காலையும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது அங்கிருந்த சந்தியாவின் தாயார் அவர்களை  சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார்.ஆனால்  கோபத்தின் உச்சத்திலிருந்த அருள் குமார், கத்தியை கொண்டு சந்தியாவை தாக்கியுள்ளார். இதில் சந்தியாவின் அம்மாவுக்கு காயம் ஏற்பட, அருள் குமார் பாய்ச்சிய கத்தியானது சந்தியாவின் கழுத்தில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

murder

இதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார், சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து கொலையாளி அருள் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காதலித்து திருமணம் செய்த மூன்று மாதங்களுக்குள் காதல் மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்க: ஜோதிடர் பேச்சை கேட்டு அடுத்தவர் மனைவிக்கு ஆசைப்பட்ட சரவணபவன் ராஜகோபால்: கொலை முதல் கைது வரை வழக்கு கடந்து வந்த பாதை!

மாவட்ட செய்திகள்

Most Popular

ரூ.1 கோடி மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்!

தசரா பண்டிகையை முன்னிட்டு தெலங்கானாவில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தால் கன்யகா பரமேஸ்வரி தேவி சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத் அருகே கட்பவாலில் வசவி கன்யகா...

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் காவலர் கொடி அணிவகுப்பு பேரணி

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி,...

கூரை ஏறி கோழிபிடிக்க தெரியாதவன்… ஸ்டாலினை கடுமையாக சாடிய அமைச்சர் செல்லூர் ராஜு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றிய கீழமாத்தூரில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிக்கான பூமி பூஜை தொடங்கி வைத்தார்.

அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா ரோஹித் ஷர்மா?

நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ள டீம் மும்பை இண்டியன்ஸ். அதற்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆனால், அவர் தற்போது இரண்டு போட்டிகளாக ஆடவில்லை.
Do NOT follow this link or you will be banned from the site!