Home இந்தியா திருமணத்துக்கு ஏன் அவ்வளவு செலவு? பெரியார் கேள்வியை உண்மையாக்கிய ஐஏஎஸ் அதிகாரி

திருமணத்துக்கு ஏன் அவ்வளவு செலவு? பெரியார் கேள்வியை உண்மையாக்கிய ஐஏஎஸ் அதிகாரி

தன் மகனின் திருமணத்திற்காக வெறும் ரூ.36,000 செலவில் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்

திருமணத்துக்கு ஏன் அவ்வளவு செலவு? பெரியார் கேள்வியை உண்மையாக்கிய ஐஏஎஸ் அதிகாரி

அமராவதி: தன் மகனின் திருமணத்திற்காக வெறும் ரூ.36,000 செலவில் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் தந்தை பெரியார். திருமணம் குறித்து நம்மிடையே பல்வேறு கருத்துகள் இருந்து நிலவி வரும் நிலையில், திருமணம் குறித்து சமகாலத்து முறைகளுக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார் பெரியார்.

periyar

தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணத்தை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய பெரியார், கல்யாணம், திருமணம் என்கிற பெயர்களைக்கூட நான் ஒப்புக்கொள்வதில்லை. வாழ்க்கை துணை ஒப்பந்தம் என்றுதான் நான் சொல்வது. ஆகையால், ஒப்பந்தத்துக்கு உறுதிமொழியும், அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும் என கேள்வி எழுப்பியவர். மேலும், திருமண செலவு ஒருவர் வாங்கும் சம்பளத்தில் பாதி இருந்தாலே போதும் என்றும் கூறியவர் அவர்.

basanthkumar

இந்நிலையில், அவரின் கூற்றுக்கிணங்க தன்னுடைய மகனின் திருமணத்தை வெறும் ரூ.36,000 செலவில் ஆந்திராவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பசந்த் குமார் நடத்தியுள்ளார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த ரூ.36,000-யையும் மணமக்கள் வீட்டார் சரிபாதியாக பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே, மகனின் திருமணத்துக்கு பசந்த் குமார் செய்த செலவு வெறும் ரூ.18,000 மட்டுமே. அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 2017-ஆம் ஆண்டு, தன் மகளின் திருமணத்தை வெறும் ரூ.16,100 செலவில் பசந்த் குமார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்துக்கு ஏன் அவ்வளவு செலவு? பெரியார் கேள்வியை உண்மையாக்கிய ஐஏஎஸ் அதிகாரி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“90நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வேண்டும்” உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 18 வயதிலிருந்து 45...

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம்

தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால், அரசு பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் முழு மூச்சில் இறங்கிய திமுக படை!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா...

கொரோனா முதல் அலைக்கு பிந்தைய அரசாங்கத்தின் அலட்சியமே இரண்டாம் அலைக்கு காரணம்- ஆர்.எஸ்.எஸ்

கொரோனா தொற்றின் முதல் அலைக்கு பின் அரசு அலட்சியமாக மாறியது என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மக்களிடையே நம்பிக்கையையும் நேர்மறை...
- Advertisment -
TopTamilNews