திருமணத்திற்குப் பிறகு தகாத உறவு : பால் வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை !

அந்த பெண்ணின் அண்ணன் செல்வம், ரமேஷை தன் தங்கையை விட்டு விலகிச் செல்லும் படி பல முறை கண்டித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியில் வசித்து வரும் சந்திர சேகர் என்னும் நபரின் மகன் ரமேஷ். இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகியுள்ளது. ஆனால், இருவரிடையேயும் அடிக்கடி சண்டை வருவதால், இவர் மனைவியைப் பிரிந்து தனியாக இருந்து வருகிறார்.

murder

இவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணின் அண்ணன் செல்வம், ரமேஷை தன் தங்கையை விட்டு விலகிச் செல்லும் படி பல முறை கண்டித்துள்ளார். ஆனால், அதனை ரமேஷ் கேட்காமல் செல்வத்தின் தங்கையுடன் பழகி வந்துள்ளார். 

ramesh

இதனால் ஆத்திரமடைந்த செல்வம், நேற்று நள்ளிரவு அவர் நண்பர்களுடன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே தூங்கிக் கொண்டிருந்த ரமேஷை, செல்வமும் அவரது நண்பர்களும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில், படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

police

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் ரமேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரமேஷை கொன்ற செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....