Home தமிழகம் திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறார் சரவணன்!

திருப்பரங்குன்றம் வழக்கை திரும்ப பெறுகிறார் சரவணன்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக சரவணன் தெரிவித்துள்ளார்

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக சரவணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ளார். காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

 இதையடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கின் நிலை குறித்தும், தொகுதி மக்களின் நலன் கருதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த வழக்கை தொடர்ந்திருக்கும் சரவணன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் அதிகாரிக்கும் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தான் திரும்ப பெறுவதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சீனிவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் பதவியேற்பதற்கு முன்னரே சீனிவேல் உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதிக்கு 2016-ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஏ.கே.போஸ் மற்றும் திமுக சார்பில் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இடைத் தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். ஏ.கே.போஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இடைத் தேர்தலின் போது அதிமுவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே, அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸூக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரும் படிவத்தில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்குரியது என  சரவணன் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில், இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை

மாவட்ட செய்திகள்

Most Popular

தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்து : இளைஞர் பரிதாப பலி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் வசித்து வரும் இப்ராஹீம் என்பவரின் மகன் ரகுமான்(36). இவர் நேற்று இரவு காரில் விருது நகரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை...

வைகை ஆற்றில் மிதந்த விஷ நுரை; பாலத்தை தாண்டி வெளியே வந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!

வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளநீருடன் வெண்மை நிறத்தில் விஷ நுரையும் கலந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்...

விஞ்ஞானியைக் கொன்ற தீவிரவாதிகள் – ஈரானில் நடந்த கொடூரம்

ஈரான் நாட்டைச் சேர்ந்த அணுசக்தி விஞ்ஞானி மெஹ்சென் ஃப்க்ஹிஸாத் (Mohsen Fakhrizadeh) மிகவும் புகழ்பெற்றவர். ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் ஈரானிய...

கொரோனா தடுப்பூசி – ஜைடஸ் நிறுவனத்தில் பிரதமர் மோடி!

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஆய்வு செய்ய புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் அகமாதபாத்தில் உள்ள ஜைடஸ் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். குஜராத் அரசு சார்பில், அவருக்கு சிறப்பான...
Do NOT follow this link or you will be banned from the site!