Home ஆன்மிகம் திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சூரிய,சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சூரிய,சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய மற்றும் சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் மலையப்ப சுவாமி காலை,மாலை இரண்டு வேளைகளிலும் திருமலையின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றார்.

tirupathi

இவ்விழாவின் 7-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடைபெற்றது. அதனைதொடர்ந்து இரவு 8 மணியில் இருந்து10 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

tirupathik

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று காலை 7 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு தங்கக் குதிரை வாகன வீதிஉலாவும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் அமர்ந்து பக்தி பரவசத்துடன் இவ்விழாவை  கண்டு களித்தனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி : ராஜா முத்தையா கல்லூரி மாற்றம்!

ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா கல்லூரியில் அதிக...

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு,...

அதிமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது : மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,...

‘ராணுவ வீரர் உடையை மாற்றி போட்டதால் சிக்கிய இளைஞர்’ : மணமகள் வீட்டாரை ஏமாற்ற செய்த வேலை!

கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவன்று, இந்தூரில் உள்ள தலைமை ராணுவ முகாம் பகுதியில் ராணுவ உடை அணிந்துகொண்டு ஒரு நபர் சுற்றித்திரிந்து உள்ளார். அந்த நபரைப் பார்த்து...
Do NOT follow this link or you will be banned from the site!