Home க்ரைம் திருநங்கையாக மாற அனுமதி கேட்ட இளைஞர்: தந்தை மறுத்ததால் எடுத்த விபரீத முடிவு!?

திருநங்கையாக மாற அனுமதி கேட்ட இளைஞர்: தந்தை மறுத்ததால் எடுத்த விபரீத முடிவு!?

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினர் அனுமதி மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருநங்கையாக மாற அனுமதி கேட்ட இளைஞர்:  தந்தை மறுத்ததால் எடுத்த விபரீத முடிவு!?

விருகம்பாக்கம்: பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினர் அனுமதி மறுத்த காரணத்தால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

boy

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் பார்த்தசாரதி. பிசிஏ பட்டதாரியான பார்த்தசாரதி, கல்லூரி படிப்பு முடிந்தும் வேலை ஏதும் தேடாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். மேலும் அவர் தன் ஆண் நண்பர்களுடன் சேராமல் இருந்துள்ளார். இதனால் அவரது நடவடிக்கைகளில் மாறுதல்கள் இருந்ததாகக்  கூறப்படுகிறது.  இந்நிலையில் பார்த்தசாரதி தனது தந்தையிடம் திடீரென்று வந்து  தான் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் கஜேந்திரன் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

suicide

இதனால் மனமுடைந்த பார்த்தசாரதி வீட்டை விட்டு வெளியேறி மணலியில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் குழுவில் சேர்ந்துள்ளார். இதையறிந்த கஜேந்திரன் அவரை தேடிக் கண்டுபிடித்து ஒழுங்காக வீட்டிற்கு வந்து சேர் என்று கூறிவிட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பார்த்தசாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த  தற்கொலை சம்பவம் குறித்து  மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மகனை அவரது போக்கில் விடாமல் வீட்டிலேயே முடக்கி வைத்ததே  இந்த தற்கொலை சம்பவத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

திருநங்கையாக மாற அனுமதி கேட்ட இளைஞர்:  தந்தை மறுத்ததால் எடுத்த விபரீத முடிவு!?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...

இந்தியா- இலங்கை டி20 தொடர்: அசத்திய சூர்ய குமார் யாதவ்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை...
- Advertisment -
TopTamilNews