Home சினிமா திருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி

திருநங்கைகளிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறையோடு பல நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் போல் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறையோடு பல நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். அது மட்டுமின்றி தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று 73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பு சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர். அதை ஊக்கவிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி வைத்துள்ளார். அவர்கள் இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது.

vj

இது குறித்துப் பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரையக் காரணம், பாலின சமத்துவத்தைப் பற்றிப் பேசிய ஒரே சுதந்திரப் போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரையும் இந்த தருணம் பெருமையாக உள்ளது. இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு  நன்றி’ என்று கூறியுள்ளார். 

vijaysethupathi

முன்னதாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கைகளை அவமானப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதை மறுத்த அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன், தான் எப்போதும் அவர்களுக்குத் துணை நிற்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Most Popular

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘எஸ்பிபி-க்கு பாரத ரத்னா, நினைவு மண்டபம்’ : அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

மறைந்த பாடகர் எஸ்பிக்கு மத்திய அரசின் பாரத ரத்னா வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி- ” நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது பெரியார் சிலையைதொட்டு பார்க்கட்டும்”- திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு ஆவேசம்!

திருச்சிஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட இனாம் குளத்தூர், சமத்துவபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு , சிலர் செருப்பு மாலை போட்டு காவி சாயம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – கடற்கரையில் குளிக்க அனுமதியில்லை!

நாகப்பட்டினம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது....
Do NOT follow this link or you will be banned from the site!