Home தமிழகம் திருடு போன பொருள்களை நவீன டெக்னாலஜியைப் பயன்படுத்தி கண்டு பிடித்த இளைஞன்..! குவியும் பாராட்டுக்கள்..

திருடு போன பொருள்களை நவீன டெக்னாலஜியைப் பயன்படுத்தி கண்டு பிடித்த இளைஞன்..! குவியும் பாராட்டுக்கள்..

மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு பந்த் அன்னிக்குக்கூட பிஸியாகத்தான் இருக்கும் என்றால் வழக்கமான நாட்களில் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம்.கூட்டம் அதிகம் இருப்பதால் திருட்டுக்கும் பஞ்சமில்லை!

மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு பந்த் அன்னிக்குக்கூட பிஸியாகத்தான் இருக்கும் என்றால் வழக்கமான நாட்களில் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டாம்.கூட்டம் அதிகம் இருப்பதால் திருட்டுக்கும் பஞ்சமில்லை! 

theft

மதுரை பெருங்குடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ். மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வரும் இவர், கடந்த ஆறாம் தேதி ஈரோடு போவதற்காக ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்திருக்கிறார்.காலியாக இருந்த பஸ் ஒன்றில் தனக்கான சீட்டில் கொண்டு வந்த ட்ராவல் பேக்கை வைத்துவிட்டு வேறு வேளைகளில் கவனமாக இருந்திருக்கிறார்.கொஞ்ச நேரம் கழித்து திரும்பிப் பார்க்கும்போதுதான் தான் கொண்டு வந்த பேக் திருடு போயிருப்பதைக் கவனித்திருக்கிறார்.
பதட்டமான ஜெயப்பிரகாஷ், அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துவிட்டு,தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்.பேக்கில் அலுவலகம் தொடர்பான ஆவணங்கள்,விலை உயர்ந்த டேப்லெட் போன்றவைகள் எல்லாம் இருந்திருக்கின்றன.அவைகள் இல்லாமல் வேலைக்கும் போக முடியாது என்ற சிக்கல் வந்ததும்,உடனடியாக நண்பர்களை துணைக்கு அழைத்திருக்கிறார்.

mobile

பொதுவாக ஆண்ட்ராயிட் போன்கள் வாங்கியதும்,அதில் ஜிமெயில் அக்கவுண்டை ஆக்டிவேட் பண்ணி,அதில் உங்கள் காண்டாக்ட் நம்பர்களை சேவ் பண்ணி வைக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.சம்பந்தமே இல்லாமல் இப்போ எதுக்கு இந்த ஆலோசனை என்று கேட்கிறீர்களா..!? காரணமாகத்தான்.
நண்பர்கள் உதவியுடன் google சர்ச்சுக்கு போய் find my device என்று தட்டிவிட்டு , ஜெயப்பிரகாஷின் டேப்லெட் எங்கே இருக்கிறது என்று தேடி,கரெக்ட்டான முகவரிக்குப் போய் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஏழுமலையை போலீஸ் உதவியுடன் போய் திருட்டுப்போன பேக்கை பத்திரமாக மீட்டிருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

friends

ஏழுமலையான்,அறையில் இது தவிர ஏற்கனவே திருட்டுப்போன பல பொருள்கள் இருப்பதைப் பார்த்த போலீசார்,பொருளையும் ஏழுமலையையும் அள்ளிக்கொண்டு போய் தங்கள் கஸ்டடியில்  வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
டெக்னாலஜியைப் பயன் படுத்தி,தனது பொருள்களை மீட்டதும் இல்லாமல்,நீண்ட நாளாக போலீசுக்கு சவாலாக இருந்த திருடனையும் பிடித்துக் கொடுத்த ஜெயபிரகாஷ்க்கு வாழ்த்துகள் குவிகிறது.

Most Popular

5 நாளில் ரூ.6.74 லட்சம் கோடி நஷ்டம்… முதலீட்டாளர்களை கலங்க வைத்த பங்கு வர்த்தகம்..

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,457 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. கடந்த திங்கள்...

டெல்லி அசத்தல் வெற்றி… சென்னை சூப்பர் கிங்ஸ் பரிதாப தோல்வி! #IPL #CSKvsDC

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாம் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்ஷிப் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.

பண்ணை வீட்டுக்கு வந்தது எஸ்பிபியின் உடல்… நாளை காலை 7 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி

எஸ்.பி.பியின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 50 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ். பி....

எஸ்பிபியை கவுரவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். 50...
Do NOT follow this link or you will be banned from the site!