Home க்ரைம் திருச்சியில் சிக்கிய வினோத திருடர்கள்...போலீசுக்கு கொடுத்த ஷாக்..!?

திருச்சியில் சிக்கிய வினோத திருடர்கள்…போலீசுக்கு கொடுத்த ஷாக்..!?

திருச்சி மாவட்டத்தில் வினோத கொள்ளைகளில் ஈடுபட்ட மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.அதென்ன வினோதமான கொள்ளை..? 

 

tirchy

திருச்சி மாவட்டத்தில் வினோத கொள்ளைகளில் ஈடுபட்ட மூன்றுபேரை காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.அதென்ன வினோதமான கொள்ளை..? 

theif

 
திருவெறும்பூர் அருகில் கோகுல் நகரிலுள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்,பீரோவில் இருந்த நகை,எல்.இ.டி டி.வி,உலகத்தரத்துல படம் பார்க்கிற ஆசையில் அதோடு இருந்த ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் என்று கண்ணில் பட்ட ஆடம்பரப் பொருள்களை எல்லாம் மொத்தமாக அர்த்த ராத்திரியில் ஆட்டைய போட்டுவிட்டு வெளியில் வந்திருக்கிறது ஒரு திருட்டுக் கும்பல்.

பொருள்களின் வெயிட் அதிகமாக இருக்கவே,பக்கத்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு,அந்த கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.கொல்கத்தாவிலிருந்து சம்மர் லீவுக்கு வந்திருந்த தர்மேந்திரன்,காலையில் நிறுத்தி வைத்திருந்த காரைக் காணாமல் அதிர்ச்சியாகியிருக்கிறார்.

உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போயிருக்கிறார், அவருக்கு பின்னாலயே அவரது வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் தியாகராஜன். அவருக்கு தனது வீட்டில் திருடு போன சம்பவம் கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிஞ்சிருக்கு!

theif

ஒரே நாளில்,அடுத்தடுத்த வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் குழப்பமான போலீஸ் அது குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.ஒண்ணும் துப்புகிடைக்கிற மாதிரி இல்லை என்று,போலீசார் குழம்பிய நிலையில்…
திருவெறும்பூர்- கல்லணை பிரிவு சாலையில் காரில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்திருக்கிறார்கள்.
 
அப்போதுதான் தெரிந்திருக்கிறது ,மூவரும்தான் மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது! உடனடியாக கார்த்திக், தமிழ்செல்வன், ஆனந்தன் ஆகிய மூவரையும் கைது செய்திருக்கிறார்கள். விசாரணையில்,இவர்கள் மூவருக்கும் இந்த மாதிரி ஆடம்பர பொருள்களை மட்டுமே திருடறது வழக்கமாம்…இப்போது கூட ஒரு கொள்ளைக்குத்தான் போய்கிட்டிருக்கோம் என்று சொல்லி போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்!

மாவட்ட செய்திகள்

Most Popular

பி.எஸ். எடியூரப்பா ரொம்ப நாளைக்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார்… வெளிப்படையாக தெரிவித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா நீண்ட காலம் அந்த பதவியில் இருக்க மாட்டார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளக்கம் கொடுத்த பிறகும் கமல் நாத்தை விடாமல் அடிக்கும் சிவ்ராஜ் சிங் சவுகான்..

அயிட்டம் வேறு அர்த்தத்தில் கூறினேன் என்று கமல் நாத் விளக்கம் கொடுத்த பிறகும், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரை விடாமல் தாக்கி வருகிறார்.

உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்

உலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Do NOT follow this link or you will be banned from the site!