Home தமிழகம் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக  இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த 24 ஆம் தேதி   சென்னை  உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

 

 க.அன்பழகன்

இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு முக ஸ்டாலின், கே. நேரு, டி.ஆர். பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக  புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி, கீ.வீரமணி, முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

க.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின்  உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

மாவட்ட செய்திகள்

Most Popular

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அன்னிய முதலீட்டாளர்கள்...

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… காரை விட்டு இறங்கியதும் எமர்ஜென்சி வார்டுக்குள் நுழைந்தார்!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அங்குள்ள உள்ளூர் செய்தி...

டெல்லியில் போராடியது விவசாயிகள் அல்ல : அடித்துச் சொல்லும் ஹெச்.ராஜா

டெல்லியில் போராட்டம் நடத்தியது விவசாயிகள் இல்லை என்றும் அவர்கள் எல்லாரும் நக்சல்ஸ் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை...

இலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல்- 4 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தமுயன்ற 4 டன் விராலி மஞ்சளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைதுசெய்தனர்.
Do NOT follow this link or you will be banned from the site!