திமுக கஷ்டடியில் 7 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்… விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழ்ப்பு… அதிர வைக்கும் மு.க.ஸ்டாலின்..!

அதிமுக எம்.எல்.ஏ.,க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்கும் அசைண்மெண்டை கையிலெடுத்து இருக்கிறது திமுக. இந்தப்பொறுப்பு அதிமுகவிலிருந்து, தி.மு.கவிற்கு வந்த செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ சேகர் பாபு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மத்தளத்திற்கு இரு புறம் இடி என்றால் எடப்பாடிக்கு ஆட்சியை காப்பாற்றுவதில் எட்டுப்பக்கமும் இடி.  ஒருபுறம்  ஓ.பி.எஸ் முறுக்கிக் கொள்ள, இன்னொரு புறம் அதிமுகவில் திறமை வாய்ந்த தலைமை இல்லை என திடீரென பொங்கி எழுகிறார்கள் கட்சியினர். மற்றொரு புறம் ஆட்சியை கவிழ்க்க திமுக உள்ளடி வேலைகளை கமுக்கமாக நடத்தி வருகிறது. எடப்பாடி

தமிழக சட்டசபையில் தற்போது அ தி மு க விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 123 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். திமுக கூட்டணியில் 101 பேர் உள்ளனர். இடைத்தேர்தலில் 22 தொகுதிகளையும் கைப்பற்றி ஆட்சியை பிடித்து விடலாம் எனக் காத்திருந்த மு.க.ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்து அதிமுக ஆட்சியை கவிழ்த்து கொல்லைப்புறமாக முதலமைச்சராக வேண்டாம் என கருதினார் மு.க.ஸ்டாலின். ஆனால் செந்தில் பாலாஜி போன்ற அரசியல் ஞானிகள், ‘’இன்னும் இந்த ஆட்சி இரண்டு ஆண்டுகள் நடைபெறும். அவர்கள் பணத்தை வலுவாக சம்பாதித்து விடுவார்கள். அந்த பணத்தை தண்ணீராய் செலவழித்து தான் 9 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்கள்.எடப்பாடி

அதேபோல சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பணத்தை வாரியிறைத்து நமக்கு பயங்கர டஃப் கொடுத்தால் நமது வெற்றி கேள்விக்குறியாகி விடும்’’ என மனக்கணக்கு போட்டுக் கொடுக்க மு.க.ஸ்டாலினும் அந்த அரிச்சுவடியை புரிந்து கொண்டார். இதனை தொடர்ந்தே  அதிமுக எம்.எல்.ஏ.,க்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்கும் அசைண்மெண்டை கையிலெடுத்து இருக்கிறது திமுக.  இந்தப்பொறுப்பு அதிமுகவிலிருந்து, தி.மு.கவிற்கு வந்த செந்தில் பாலாஜி,  அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ சேகர் பாபு  ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.அனிதா

அவர்களும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இது வரை 7 எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசப்படுத்தி விட்டார்களாம். இந்தத் தகவலை எடப்பாடியாரிடம் கொடுத்திருக்கிறது உளவுத்துறை. அதில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 50 பேரிடம் திமுக பேசியதாக கூறப்பட்டதால் அதிர்ச்சியாகி இருக்கிறார் எடப்பாடியார். 

சந்தேகம் எழுந்த 50 எம்.எல்.ஏக்களையும்  அழைத்து வெளிப்படையாக விஷயத்தை சொல்லாமல், கோபத்தை காட்டாமல் நாசுக்காக பேசியுள்ளார் எடப்பாடி.  அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அவர்களும் ‘உங்களுக்கு பக்கபலமாக இருப்போம்’ என, வாக்குறுதி அளித்து சென்றுள்ளனர். அது, முதல்வருக்கு தெம்பை அளித்தாலும், உளவுத்துறை அறிக்கை ஏற்படுத்திய கலக்கம் போகவில்லை. செந்தில் பாலாஜி

ஆனாலும் தங்கள் வசப்படுத்திய எம்.எல்.ஏக்களுடன் ரகசிய தொடர்பில் இருக்கிறது திமுக. ஆக மொத்தத்தில்  எடப்பாடியின் நாற்காலிக்கு எப்போதும் ஆபத்து என்பதே எதார்த்தமான நிலவரம்.
 

Most Popular

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...

ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்கள் கலந்துகொள்வதில் சிக்கல் #IPL_Updates

ஐபிஎல் என்றாலே உற்சாகம். ஐபிஎல் என்றாலே கொண்டட்டம். கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சிறந்த பொழுதுபோக்காக மாற்றியது ஐபிஎல் போட்டிகளே. கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் கேள்வி உருவானது. போட்டிக்கான அறிவிப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!