Home அரசியல் திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வழக்கு : மகனுக்கு 15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக வழக்கு : மகனுக்கு 15,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு

முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் சாத்தையா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முத்தையாவை காணவில்லை என்றும் அவரை அதிமுகவினர் தான் கடத்தியிருப்பர் என்றும் அவரது மகன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காணாமல் போனதாகக் கூறப்படும் சாத்தையாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் அப்படி ஆஜர் படுத்தவில்லை என்றால்  ராமநாதபுரம் எஸ்.பி. நேரில் ஆஜராக வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர். 

ttn

அதன் படி, இன்று சாத்தையா காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதில் சாத்தையா, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தன் மகனுடன் இருக்க பிடிக்காமல், மகளுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான நீதிபதிகள்,  நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக சாத்தையா மகன் ராஜாவுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். 

Most Popular

பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்தது

102 அடியை தாண்டும் என்று நிலையில் இருந்த பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில்...

ஊர்க்காவல் படையில் 40 பணியிடங்கள் காலி: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு ஊர்க்காவல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்தி குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

2.6 லட்சம் பேர் அமெரிக்காவில் மரணம் – கொரோனாவின் கோரம்

உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட வில்லை கொரோனா. தற்போதைய நிலையில் உலகளவில் அதிக கொரோனா பாதிப்பு அமெரிக்காவுக்கே. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர்....

கொரோனாவால்தான் இறந்தாரா? உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு!

கொரோனா பாதிப்பில் இறந்ததாக கூறப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தார்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இறந்தவரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.
Do NOT follow this link or you will be banned from the site!