Home அரசியல் திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 156, அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்.

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்
திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

முன்னதாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் சட்டமன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 133 பங்கேற்ற கூட்டத்தில் ஒருமனதாக ஸ்டாலின் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று ஆளுநரை சந்திக்கிறார்.

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்

சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் இன்று காலை 10 மணிக்கு ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வான கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கிறார் மு.க.ஸ்டாலின். அத்துடன் திமுக அமைச்சரவைப் பட்டியலை ஆளுநரிடம் வழங்கும் அவர் வரும் ஏழாம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. கொரோனா தொற்று பரவல் காலமென்பதால் குறைந்த அளவிலான நபர்களுடன் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற உள்ளது.

திமுக அமைச்சரவை பட்டியலுடன் இன்று ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“10 வயதில் தந்தையை இழந்தேன்; 80 வயதில் எனது ஞானதந்தையை இழந்துள்ளேன்” நடிகர் சிவக்குமார் உருக்கம்!

பிரபல எழுத்தாளர் கி.ரா. மறைவுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா...

“கரிசல் குயில் பறந்தது” கி.இரா.மறைவுக்கு வைகோ இரங்கல் !

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பால் காலமானார். புதுச்சேரி லாஸ்பேட்டை...

இ-பதிவு பெறுவதற்கான காரணங்களில் ‘இதுவும்’ சேர்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியில் தேவையின்றி ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல இ பதிவு...

ரெம்டெசிவிர் மருந்தை இணையத்திலும் பெறலாம்…எப்படி தெரியுமா?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 33,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,63,129 ஆக...
- Advertisment -
TopTamilNews