Home சினிமா திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்ததா!? ரஜினி -கமல் இருவரையும் வெளுத்துவாங்கிய சீமான்!

திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்ததா!? ரஜினி -கமல் இருவரையும் வெளுத்துவாங்கிய சீமான்!

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘அமீரா’. தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தைப் பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘அமீரா’. தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தைப் பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் இயக்கும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று ஈக்காட்டுதாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. 

seeman ameera

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமான் பேசும்போது, இது இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் கதை. அதனால் இப்படத்திற்குப் பொருத்தமாக இருக்குமே என்று அமீரா என்று பெயர் வைத்தோம். அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். என்னைப் பார்க்கும் பலரும் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி, அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களை செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது.மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்..அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்குச் செலவிடுகிறேன்.அவ்வளவுதான்’ என்றார்.

தொடர்ந்து  பேசிய சீமான், ‘இப்படம் சமூக அவலங்கள், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள், ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இஸ்லாம் தீவிரவாதத்தை உருவாகும் மதம் என்று சொல்கிறார்கள். அதெல்லாம் கட்டுக்கதை. இந்து, கிறிஸ்து, பௌத்தம் என எல்லா மதங்களிலும் தீவிரவாதம் உண்டு. அதேசமயம் எல்லா மதங்களும்  ஒழுக்கத்தையே போதிக்கின்றன. அதனால் இந்த படம் சமூக அக்கறை கொண்ட படமாகவே இருக்கும்.  இன்றைய சூழலில் குடும்ப உறவுகளைச் சொல்வதே ஒரு சமூக அக்கறைதானே..? 

seeman

பொழுதுபோக்கு படங்களில் நடிப்பதற்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள். நான் அதற்கு தேவைப்படவும் மாட்டேன். அதே சமயம் எனக்கேற்ற கதாபாத்திரங்கள், அதன்மூலம் நாம் சொல்ல விரும்பும் விஷயங்கள் சரியாக அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன். 

நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையிலிருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். சரி நான் ஒன்று கேட்கிறேன்? கமல் ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையிலிருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்ததா..? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்..? கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் ஏன் சென்று சந்திக்கவில்லை எனக் கேட்டால் நான் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்கிறார்.

அப்படியானால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்ப்பதற்கு எதற்காக சென்றார்..? எந்த நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன், ஆனால் நேராக முதல்வர் நாற்காலியில் தான் போய் உட்காருவேன் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?

seeman

நாங்கள் அப்படி இல்லை. கட்சி தொடங்கி எட்டு வருடமாக மக்களுக்காகப் போராடி வருகிறோம். இதில் ஒன்றரை வருடம் சிறையிலேயே இருந்திருக்கிறேன். இவர்கள் எல்லாம் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்த காலத்தில் நான் இனத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்தேன். அதனால் என்னை சினிமா நடிகர் என்கிற பார்வையில் பார்க்க முடியாது.. சினிமாவில் நடிப்பது மட்டுமே நாடாளும் தகுதியாகி விடும் என்பதைத்தான் நாங்கள் வெறுக்கிறோம்.

தமிழக அரசு 2000 ரூபாயும் மத்திய அரசு 6 ஆயிரம் ரூபாயும் தருகிறது. இதை வேண்டாம் என ஒதுக்கும் நிலையில் நம் மக்களை அவர்கள் வைக்கவில்லையே..? நல்லாட்சி கொடுத்திருந்தால் இப்படி பணம் கொடுக்கத் தேவை இல்லையே.. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் அந்த இழிநிலைக்கு  மாற்றியது யார்..?’ என்று அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தார் சீமான்.

சீமான் சார் இது பொதுக்கூட்டம் இல்ல, நீங்க படப்பூஜைக்கு வந்தத மறந்துடீங்க போல….

மாவட்ட செய்திகள்

Most Popular

‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்!

தெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...

கருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...

18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : காப்பக இயக்குநருக்கு போலீஸ் வலைவீச்சு!

பாலியல் தொல்லை கொடுத்த காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு...

“ஏன்யா நான் வேணாம் ,என் மகன் மட்டும் வேணுமா?” -காதலியின் மகனை கடத்திய தந்தை .

கல்யாணம் செய்யாமல் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்த மகனை கடத்திய ஒரு தந்தையை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிறுவனை மீட்டார்கள்
Do NOT follow this link or you will be banned from the site!