திமுகவை அலறவிடும் அதிரடி வீடியோ… மீண்டும் வசமாக சிக்கிய தமிழன் பிரசன்னா..!

தனது மொபைலில் இருந்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக்காட்டினார். இதற்கு பிரசன்னாவால் வாயை திறக்க முடியவில்லை.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி -கள் பதவியேற்றபோது பாஜக எம்.பி – கள் ஜெய் ஸ்ரீ ராம் கோசம் போட்டது எந்த வகையில் நியாயம் என்ற கோணத்தில் விவாதத்தை நடத்தியது. இதில் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக சார்பில்  அக்கட்சியின் செய்தி தொடர்பு இணை செயலாளர் பிரசான்னா , மற்றும் எழுத்தாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.prasanna

விவாதத்தின் தொடக்கத்திலேயே திமுகவை சேர்ந்த பிரசன்னா, வானதி சீனிவாசனை ’இது பெரியார் மண், நாங்கள் திராவிட பிள்ளைகள்’ என்று சொல்லி வம்பிழுத்தார் அதற்கு வானதி தரப்பில் இருந்து பாஜக தமிழுக்கு என்று மதிப்பளிக்கும் இயக்கம் திமுக போல் நாடகமாடுவது எங்கள் பொழப்பு அல்ல ஹிந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாடுவது ஆனால் திமுகவினர் இந்தி பள்ளிகளை நடத்தி வியாபாரம் செய்வது என்று வெளுத்துவாங்கி விட்டார்.

அதற்கடுத்து எழுத்தாளர் பிரபாகரன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பிரசன்னாவால் வாயை திறக்கமுடியவில்லை, முதலில் திமுகவிற்கும், பெரியாருக்கும் என்ன தொடர்பு அண்ணாவை, கருணாநிதியை பெரியார் கிழித்த கிழியை இங்கு சொன்னால் அசிங்கமாகிவிடும் , பெரியாரை கருணாநிதி திட்டியதை சொன்னால் விவாதமே நடைபெறாது அப்படி ஒரு சண்டை போட்டுக்கொண்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்று பெரியாரை தூக்கி வைத்து கொண்டாட காரணம் என்ன என கேட்டார்.

தமிழக மக்களை தொடர்ந்து திமுக முட்டாள் ஆக்குகிறது தமிழை அளிப்பதே எனது முதல் நோக்கம் என்று சொன்ன பெரியார் எப்படி தமிழின தலைவராக முடியும், இதற்கு உங்களிடம் எந்த பதிலாவது இருக்கிறதா வீட்டு வேலைக்காரியிடம் கூட தமிழில் பேசாதே என்று சொன்னவர்தான் உங்கள் பெரியார் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.Prasanna

மேலும் தலித்துகளை பெரியார் எத்தனை இடங்களில் அவமான படுத்தியிருக்கிறார், என்று சொன்னால் உங்களால் பதில் சொல்லமுடியுமா என்று கேட்க பதில் சொல்லமுடியாத பிரசன்னா எழுத்தாளரை வழக்கம்போல் தனிநபர் தாசுக்குதலுக்கு உள்ளாகினார்.

மேலும் எந்த இடத்திலும் திமுக தலைவர் கலைஞர் பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தை எழுதவில்லை என்று போகிற போக்கில் ஒரு பொய்யை எடுத்துவிட்டார்பிரசன்னா, அப்போது சரியாக எழுத்தாளர் ஆதாரத்தை தனது மொபைலில் இருந்து எடுத்துக்காட்டி 12 ம் தேதி ஜூன் மாதம் 1965 என்று நாளினை சரியாக குறிப்பிட்டு இன்று கலைஞர் பெரியாரை திட்டி இருக்கிறார் என்று தனது மொபைலில் இருந்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்.Prasanna

இதற்கு பிரசன்னாவால் வாயை திறக்க முடியவில்லை. மேலும் இப்படித்தான் வரலாற்று நிகழ்வுகளை கூட திமுகவினர் பொய் சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள் தமிழ் தமிழ் என்று கத்துபவனை நம்பாதீர்கள், தமிழனை உயர்த்துபவனை நம்புங்கள் என்று அதிரடியாக தனது பேச்சினை பேசி முடித்தார். எழுத்தாளர் பிரபாகரனின் குற்றச்சாட்டிற்கு பிரசன்னா கடைசிவரை வாயே திறக்கவில்லை.

Most Popular

‘பணம் கொடுங்கள் இபாஸ் வாங்கித் தருகிறேன்’ அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்!

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை மக்களுக்கு பெரும் இன்னல்களை உண்டாக்கி வருகிறது. இதனை நீக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தும், அதனை இப்போதைக்கு தகர்க்க வாய்ப்பில்லை என முதல்வர் கூறிவிட்டார். இருப்பினும் மக்களின்...

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் : கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

இன்னும் 8 மாத காலத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  வர உள்ளது. இதற்கான பணிகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துவங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாவட்ட நிர்வாகிகள் நியமிப்பது உள்ளிட்ட தேர்தல்...

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடை… அங்கு பா.ஜ.க போராட்டம் நடத்துமா என்று தமிழக மக்கள் கேள்வி!

கர்நாடகாவில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை நிறுவ, ஊர்வலம் நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பா.ஜ.க, இந்து அமைப்புகள்...

குப்பையில் கிடந்த பணம், நகைகள்… சேமித்து வைத்த மூதாட்டிகள்!- உதவி கரம் நீட்டிய சென்னை போலீஸ்

சொந்த வீட்டில் குப்பைகளோடு நகை, பணத்தை சேமித்து வைத்துவிட்டு பிளாட்பாரத்தில் வாழ்ந்த மூதாட்டிகளுக்கு சென்னை காவல்துறையினர் உதவி செய்ததோடு, சொந்த வீட்டில் வாழ வைத்துள்ளனர். சென்னை, ஓட்டேரி சத்யவாணி முத்துநகரில் மூன்று மாடிகள் கொண்ட...
Do NOT follow this link or you will be banned from the site!