திமுகவில் புகுந்து அதிரடி அரசியல்… சேர்த்து விட்ட சீனியருக்கே ஆப்பு வைத்த செந்தில் பாலாஜி..!

மு.க.ஸ்டாலின், உதயநிதியிடம் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதால் செந்தில்பாலாஜி கே.என். நேருவை கண்டு கொள்வதே இல்லை.

செந்தில் பாலாஜியின் அரசியலை இப்போது உணர்ந்திருப்பார்கள் திமுக நிர்வாகிகள். கட்சிக்குள் வந்து சில மாதங்களிலேயே சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு முக்கியப்புள்ளி ஆகிவிட்டார் செந்தில் பாலாஜி. senthil balaji

ஆரம்பத்தில் திமுகவில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அடுத்து அதிமுகவில் இணைந்து சீனியர்களுக்கே தண்ணீர் காட்டிவிட்டு போக்குவரத்து துறை அமைச்சரானார். ஜெயலலிதா ம்றைந்த பின்  அ.ம.மு.க.வுக்கு தாவினார். மீண்டும் ஆரம்பப்புள்ளியான திமுகவுக்கு மாறி அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., வாகவும் ஆகிவிட்டார். இவரை, தி.மு.க.,வுக்கு கொண்டு வந்தது, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு தான்.senthil

ஆரம்பத்தில் நேருவிடம் பவ்யமாக நடந்து கொண்ட செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., ஆனதும் மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள்.  மு.க.ஸ்டாலின், உதயநிதியிடம் தனது  செல்வாக்கை வளர்த்துக் கொண்டதால் செந்தில்பாலாஜி கே.என். நேருவை கண்டு கொள்வதே இல்லை. KN Nehru

சமீபத்தில் அவரது கரூர் மாவட்டத்துல நடந்த நிகழ்ச்சிகளுக்கு கூட, திண்டுக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி போன்றோரை  சிறப்பு அழைப்பாளர்களாக  அழைத்திருந்தார். நேருவை அழைக்கவில்லை. இப்போதெல்லாம் நேருவிடம், செந்தில் பாலாஜி பற்றி யாராவது பேச்சை எடுத்தாலே, ‘அட விடுங்கப்பா… திறமை இருக்கிறவங்க, முன்னேறிட்டு போகட்டும்’ என  விரக்தியாக சொல்லி வருகிறார்.
 

Most Popular

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...

“ஆன்லைனில் பைக் ஆட்டைய போட்டார் ” டெஸ்ட் டிரைவ் பண்றேன்னு பைக்கோடு பறந்து போனார் -திருட்டு பைக்கை வைத்து ஒரு ஷோ ரூமே நடத்தினார் .

'கான் இன் 60 விநாடிகள்'என்ற ஹாலிவுட் படம் பார்த்து, அதே ஸ்டைலில் டெஸ்ட் டிரைவ் பார்ப்பதாக கூறி ஆன்லைனில் விற்பனைக்கு வரும் பைக்குகளை திருடி விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புது தில்லியில்...
Do NOT follow this link or you will be banned from the site!