Home அரசியல் திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது! திமுக - காங்கிரஸ் இடையே விரிசல் 

திமுகவின் செயல் கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது! திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் 

திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் . அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் . அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, “தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.

Congress DMK

திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட செய்திகள்

Most Popular

ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் குழப்பம்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட கருத்தினால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல்...

5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி...

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240...

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

விருதுநகர் ராஜபாளையத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம்...
TopTamilNews