Home சினிமா திட்டம் போட்டு தயாரிப்பாளரை பழிவாங்கிய சிவகார்த்திகேயன் 

திட்டம் போட்டு தயாரிப்பாளரை பழிவாங்கிய சிவகார்த்திகேயன் 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரின் ஞானவேல் ராஜா  தயாரித்திருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரின் ஞானவேல் ராஜா  தயாரித்திருந்தார். வெளியான இரண்டே நாளில் படம் பப்படமாகிவிட்டது. ஆர்வமாகப் படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்களும்,மால் தியேட்டர்களில் பெரிய ஸ்க்ரீன்லருந்து சின்ன ஸ்க்ரீனுக்கு மாத்துகிற அளவுக்கு படு மோசம் என்று எல்லா இடத்திலும் ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கிறது! 

mrlocal

பெரிய அளவில் கல்லா கட்டலாம் என்று கனவோடு இருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா,எதிர்மறை ரிப்போர்ட்டால் படு அப்செட்டில் இருக்கிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் இந்த ரிசல்ட்டைக் கேட்டு உள்ளுக்குள் உற்சாகமாக இருக்கிறார் என்று வெளிப்படையாகவே சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது!

‘யோவ்…அறிவிருக்கா உனக்கு..! எந்த ஹீரோவாவது தன்னோட படம் ஓடலேன்னு சந்தோசப்படுவானா..?! ‘என்று நீங்கள் ஏகப்பட்ட கேள்விக்குறி, ஆச்சர்யக்குறியெல்லாம் போட்டுக் கேட்பது நல்லாவே கேக்குது.கோவப்படாம கொஞ்சம் ஃபிளாஸ் பேக் போவோமா…

‘கேடி பிள்ளா கில்லாடி ரங்கா’படத்தோட ரிலீஸுக்கு முன்னாடியே ஒரு சம்பளம் பேசி அட்வான்ஸ் கொடுத்திருந்தார் ஞானவேல் ராஜா.சிவகார்த்திகேயன் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடிச்சதும்,சம்பளம் எகிறிடுச்சு.கூடவே வேறொரு ராஜாவும் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து கொள்ள ஞானவேல் ராஜா கொடுத்த பணத்துக்கு பதிலே சொல்லாமல் இருந்தார் சிவகார்த்திகேயன்.

விசயம் பஞ்சாயத்துக்கு வந்தது.கொடுத்த அட்வான்ஸை வட்டியோட திருப்பிக் கொடுக்கிறேன்னு சிவகார்த்திகேயனும்…ம்கூம்,எனக்கு படம் நடிச்சுக்கொடுங்க என்று இரண்டு பேருமே முரண்டு பிடித்தார்கள்.ஒருவழியா,இப்போ சிவா கார்த்திகேயன் வாங்குகிற சம்பளத்தில் பாதி சம்பளத்தை வாங்கிகிட்டு நடிச்சு கொடுக்கணும்னு பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டது.

அதில்,சிவகார்த்திகேயன் ரொம்பவே அப்செட்…நமக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல…எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு ஊர்கள்ல ஒரு குரூப் வேலை பார்ப்பானுங்க.அந்த வகைதான் இதுவும் என்கிறார்கள் இரண்டு தரப்பையும் நன்கு அறிந்த சிலர்! ஞானவேல் ராஜாவுக்கு 20 கோடிக்கு மேல் நட்டம் ஆவதற்கான வாய்ப்பு அதிகமாம்!

பொங்கின பார்ட்டிங்க,ரெண்டையும் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்துக்கவும்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews