Home சினிமா திட்டத்தை போட்டுடைத்த பாண்டே: கடுப்பான தல அஜித்!?

திட்டத்தை போட்டுடைத்த பாண்டே: கடுப்பான தல அஜித்!?

அஜித்தின் எதிர்கால திட்டம் இது தான் என்று புட்டுப்புட்டு வைத்த பாண்டே மீது  தல அஜித் கோபத்தில் உள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

அஜித்தின் எதிர்கால திட்டம் இது தான் என்று புட்டுப்புட்டு வைத்த பாண்டே மீது  தல அஜித் கோபத்தில் உள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

AJITH

பாலிவுட்டில் வெளியான பிங்க்  திரைப்படத்தில் நடிகர் அமிதாப் பச்சான், டாப்ஸி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, தமிழில்  நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் வினோத் இயக்கம் இப்படத்தில்,  அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் இவருடன்,  நடிகை வித்யா பாலன்,  ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தைத் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது.

ajith

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் அஜித்துடன் பயணித்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் அஜித் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘விளையாட்டு மட்டுமே இளைஞர்களை ஆக்கப்பூர்வமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும் என்று தீர்க்கமாக நம்புகிறார் அஜித் . இதனால் உலகம் முழுவதும், இந்தியாவும், தமிழகமும் போற்றும் வகையில் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய தமிழக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைய வேண்டும் என்று நினைக்கிறார்.  இதை அவர் என்னிடம் சொல்லவில்லை. நான் அவரை கவனித்ததை  வைத்து கூறுகிறேன்’ என்று கூறியிருந்தார். 

RANGARAJ

ரங்கராஜ் பாண்டேவின் இந்த வீடியோவிற்கு அஜித் ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அஜித்தின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதில்லையே பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால்  அஜித்தை பற்றி நல்ல விதமாய் ரங்கராஜ் பாண்டே கூறி இருந்தாலும் அது அஜித்துக்கு எரிச்சலையூட்டி உள்ளதாகத்தான் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசியமாகத் தான் வைத்திருக்கும் ஒருசில விஷயங்களை இப்படி பொதுவெளியில், விளம்பரத்திற்காகக் கூறுவது அஜித்துக்கு  அறவே பிடிக்காதாம். அதனால் தான் பேசும்  போது  வெளிப்படுத்திய சில விஷயங்களை ஒன்றாக கோர்த்து தன் எதிர்கால திட்டத்தை இப்படி போட்டுடைத்து விட்டாரே என்று பாண்டே மீது கடுப்பில் உள்ளாராம் தல…. 

மாவட்ட செய்திகள்

Most Popular

‘சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா’ – முதல்வர் பழனிசாமி புகழாரம்!

இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா தான் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர்...

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து

கோவை மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோயில்...

“அது இருந்தாத்தானே அடுத்தவளை தேடுவே” -காதலித்த வாலிபருக்கு அந்தரங்கத்தில் சிகரட் சூடு.

ஒரு காதலியின் தந்தையின் அடியாட்கள், காதலனை கடத்தி சென்று அவரின் அந்தரங்க பகுதியில் தாக்கி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது

மனமிறங்காத திமுக தலைமை – சமாளிக்க முடியாமல் திணறும் மாவட்ட நிர்வாகிகள்!

திமுக தலைவர் ஸ்டாலினின் புதிய பிரச்சார அறிவிப்பு, அந்த கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘’ தேர்தலுக்குள் டீ, காபிக்குக் கூட யாரிடமாவது கையேந்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என புலம்புகிறார்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!