Home சினிமா "தாலி போடுவதும் போடாததும் என் விருப்பம்": ரஹ்மான் மகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி

“தாலி போடுவதும் போடாததும் என் விருப்பம்”: ரஹ்மான் மகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி

எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இல்லை. மாறாக நான் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

"தாலி போடுவதும் போடாததும் என் விருப்பம்": ரஹ்மான் மகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி

ரஹ்மானின் மகள் கதிஜா முகத்தை மூடிக்கொண்டு புர்கா அணிவது கடந்த ஆண்டு விமர்சனத்திற்குள்ளானது. சமீபத்தில்   எழுத்தாளர்  தஸ்லீமா நஸ்ரின்  ‘ரஹ்மானின் இசையை நான் விரும்புகிறேன். ஆனால்  அவரது மகளை பார்க்கும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பது வருத்தம் அளிக்கிறது’ என்று கூறியிருந்தார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான்

அதற்கு விளக்கமளித்த ரஹ்மானின் மகள் கதிஜா, ஒரு வருடத்திற்குப் பின்பு மீண்டும் இந்த டாபிக் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு பெண் அணியும் துண்டு உடையின் மீது ஏன் கவனம் செலுத்துகிறீர்கள். ஒவ்வொரு முறையும் இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது.எனது ஆடையால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இல்லை. மாறாக நான் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் கதிஜாவுக்கு ஆதரவாக பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், ’மிகவும் சிறிய உடைகளை அணியும் பெண்களை கண்டித்து அசிங்கப்படுத்துவது போல் தான் புர்கா அணியும் பெண்களை விமர்சனம் செய்வதும்,  புர்கா அணிவதும், அணியாததும் கதீஜாவின் சொந்த விருப்பம்’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர்,  ‘தாலி’  அணிந்துள்ளது மற்றும் குங்குமம் வைத்துக்கொள்வது குறித்து சர்ச்சையாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சின்மயி, நான் தாலி அணியவேண்டும் என்றும் எனது கணவரோ, அவரது குடும்பத்தினரோ கட்டாயப்படுத்துவதில்லை. நானே விருப்பப்பட்டுத்  தான் தாலி அணிகிறேன். தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் எனது சாய்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். 

"தாலி போடுவதும் போடாததும் என் விருப்பம்": ரஹ்மான் மகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“இது பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்” – எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டு!

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தியது அதிமுகவை திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையின் முதல் கட்டம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். பங்களா – மீட்க போராடும் வாரிசுகள்

தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி என்பதால் தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றி விடலாமா என்று ஆலோசனை மேற்கொண்டார் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அதன் தொடர்ச்சியாக திருச்சியில் தனக்கு ஒரு வீடு இருக்க...

புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்களை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

நீராதாரங்களை அதிகரிக்க புதிய நீர் நிலைகளில் உருவாக்கிடவும், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்த பயன்படுத்தவும் , மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திடவும் , நீர்வளத் துறை...

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக… தாங்களே பதக்கம் அணிவித்துக் கொள்ளும் வீரர்கள்!

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ஒலிம்பிக் போட்டியை கொரோனா வைரஸ் முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது. கடந்த ஆண்டே நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த...
- Advertisment -
TopTamilNews