தாயை ஆபாசமாகப் பேசிய தாய்மாமன் : கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் !

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகன் கோகுல்ராஜ். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் நேற்று இரவு குடித்து விட்டு வந்து சரஸ்வதியை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

Gokulraj

எப்போதுமே அவர் குடித்து விட்டு சரஸ்வதியைத் திட்டுவதாகக் கூறப்படுகிறது. நேற்றும் அதே போலத் திட்டுவதைப் பார்த்த, கோகுல் ராஜ் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். வெளியே சென்றும் கூட, வாசலில் நின்று கொண்டு மீண்டும் எத்திராஜ் திட்ட ஆரம்பித்துள்ளார். 

Ethiraj

இதனால் ஆத்திரமடைந்த கோகுல் ராஜ் அவரது தாய்மாமனை அருகே இருந்த கருங்கல்லைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். அதில் தலையில் படுகாயம் அடைந்த எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் எத்திராஜின் உடலைக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், பரங்கிமலை காவல்துறையினர் கோகுல்ராஜைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....