Home சினிமா தளபதி 63: ரிலீஸ் தேதி மாற்றமா? தயாரிப்பாளர் அதிரடி! 

தளபதி 63: ரிலீஸ் தேதி மாற்றமா? தயாரிப்பாளர் அதிரடி! 

தளபதி 63 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலைத் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக மறுத்துள்ளது

சென்னை: தளபதி 63 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலைத் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக மறுத்துள்ளது.

ags நிறுவனம் தயாரிப்பில் தளபதி 63 உருவாகி வருகிறது. தெறி, மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு,விவேக்,ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகச் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. மெர்சல், சர்கார் படங்களைத் தொடர்ந்து விஜய்யின் இப்படத்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ags

இந்நிலையில், தளபதி 63 திரைப்படத்தின் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படம் தீபாவளி முன்பாகவே வெளியாகும் என்ற தகவல் பரவின. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என தளபதி 63 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே திட்டமிட்டபடி, தீபாவளிக்கு தளபதி 63 ரிலீசாவது உறுதியாகியுள்ளது.இதனால் தளபதி ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews