Home சினிமா ‘தளபதி 63’ அப்டேட்: விஜய்யுடன் இணையும் காமெடி பிரபலம்!

‘தளபதி 63’ அப்டேட்: விஜய்யுடன் இணையும் காமெடி பிரபலம்!

தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்கவுள்ளார்.

‘தளபதி 63’ அப்டேட்: விஜய்யுடன் இணையும் காமெடி பிரபலம்!

சென்னை: தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்கவுள்ளார்.

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து 3வது முறையாக அட்லி-விஜய் காம்போவில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகவுள்ளது. ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதுவரை இந்நிறுவனம் தயாரித்த திரைப்படங்களில் ’தளபதி 63’ திரைப்படம் தான் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான விஜய்-விவேக் காமெடி காம்போ மீண்டும் ‘தளபதி 63’ படத்தில் இணையவுள்ளது.

vijay

இதனை நடிகர் விவேக் சமீபத்தில் பங்கேற்ற விழா ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே, விஜய்- விவேக் கூட்டணியில் ‘நேருக்கு நேர்’, ‘குஷி’, ‘பிரியமானவளே’, ‘பத்ரி’, ‘ஷாஜஹான்’, ’தமிழன்’, ‘யூத்’, ‘திருமலை’, ‘உதயா’, ‘ஆதி’, ‘குருவி’, உள்ளிட்ட 11 திரைப்படங்களில் இவர்கள் அடித்த காமெடி சூப்பர் ஹிட்டான நிலையில், ‘தளபதி 63’ படத்திலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

‘தளபதி 63’ அப்டேட்: விஜய்யுடன் இணையும் காமெடி பிரபலம்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது.. மோடியை கிண்டலடித்த ராகுல்

மக்கள் விரும்புவதை அவர் கவனித்து இருந்தால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி தாக்கினார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது...

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும் தேங்காயை இப்படி சாப்பிடுங்க

தேடினாலும் கிடைக்காத ஆரோக்கியம் தரும்  தேங்காய் - இந்து கலாச்சாரத்தில் ஆன்மீக செயல்முறைகளில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுவதில் ஒன்று, தேங்காய் (Coconut in tamil). கடவுளர்களுக்கு...

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

எண்ணூரில் கடலில் நண்பருடன் குளித்து விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன்...

கிழவர்களுக்கும் இளமையை அள்ளிகொடுத்து ,துள்ளி விளையாட செய்யும்  இந்த கிழங்கு

மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. மன நலம் நன்றாக இருந்தால்தான் உடல் நலமும் நன்றாக இருக்கும். மனதில் உள்ள பிரச்சினைகள் உடலிலும், உடலில் உள்ள...
- Advertisment -
TopTamilNews