Home சினிமா தளபதி விஜய்யுடன் நடிக்கும் பிரபல காமெடி நடிகரின் மகள்: யார் தெரியுமா?

தளபதி விஜய்யுடன் நடிக்கும் பிரபல காமெடி நடிகரின் மகள்: யார் தெரியுமா?

நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் நடிக்கவுள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் – இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் நடிக்கவுள்ளார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் சென்னையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.  இதில் இயக்குநர் அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

atlee

விழாவில் திரைத்துறையில் பல ஆண்டுகளாகக் கடை நிலை ஊழியர்களாகப் பணியாற்றி வரும் நலிந்த ஊழியர்களுக்கு உதவித் தொகையும் பொங்கல் பரிசு பைகளையும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் அட்லி, பிரியா அட்லி, நடிகர் ரோபோ ஷங்கர் ஆகியோர் வழங்கி கவுரவப்படுத்தினர்.

atlee

அப்போது பேசிய இயக்குநர் அட்லீ, ‘பத்திரிகையாளர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்துவது ரொம்ப மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக சொல்வதென்றால் இந்த விழாவில் சினிமாவில் கடை நிலை ஊழியர்களை அழைத்து கவுரவம் செய்வது மிக சிறப்பு.அந்த நிகழ்வில் என்னை அழைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று கூறினார்.

robo shankar

இதையடுத்து பேசிய நடிகர் ரோபோ ஷங்கர், ‘இந்த நல்ல விழாவில் ஒரு நல்ல தகவல் இயக்குனர் அட்லி அவர்கள் அனுமதியோடு சொல்றேன்.  என் மனைவியும், மகளும் ஒவ்வொரு நாள் ராத்திரியும் டிக் டாக் வீடியோ போடுறோம்னு தினமும் என்னை டார்ச்சர் பண்ணாங்க.  அப்படி அவங்க செய்த பல வீடியோக்கள் யார் மூலமாகவோ இயக்குநர்  அட்லி பார்வைக்கு போயிருக்கு. தளபதி விஜய் படத்தில் நடிக்கப் போறவங்க தேர்வு நடந்து வருது. அதுல என் மகளின் வீடியோவை பார்த்ததால் விஜய் சார் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்குத் தேர்வாகி இருக்கிறார். முன்னாடியே பல வாய்ப்புகள் வந்த போது படிப்பு முக்கியம் என்று தவிர்த்தேன். 
ஆனால் அட்லி – விஜய் கூட்டணியில் நடிக்க வாய்ப்பு வந்தால் விட முடியுமா?’ என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 40வது ஆட்டத்தில் , ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ்...

விரைவில் கட்சி அப்டேட்… ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகம்

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பின்போது தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து,...

கூட்டணியை மாற்றும் ராமதாஸ்? அதிமுக அரசை சாடியதால் சர்ச்சை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு...

ஒரு மணி நேர மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை!- கமல்ஹாசன்

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் பருவமழை தொடங்கவிருக்கிறது. பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல...
Do NOT follow this link or you will be banned from the site!