Home சினிமா தளபதி விஜய்யின் ‘சர்கார்’ கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும் சூப்பர்ஸ்டார்?

தளபதி விஜய்யின் ‘சர்கார்’ கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளும் சூப்பர்ஸ்டார்?

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து ‘சர்கார்’ திரைப்படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘சிம்டாங்காரன்’, ‘ஒரு விரல் புரட்சி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்கள் இன்று மாலை ரிலீசாகிறது.

தாம்பரம் அருகே பிரபல தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, ரஜினியின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாக கூறப்படும் நிலையில், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அரசியல் பேசும் விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வரும் நவ.6ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews