தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ’விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென வெளியானதை போன்று, நாளை ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சென்னையின் முன்னணி திரையரங்கு உரிமையாளர், தல ரசிகர்களுக்கு நாளை ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கு என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Sweet Surprise for #Thala fans tomorrow @RohiniSilverScr #ViswasamThiruvizha
— Nikilesh Surya (@NikileshSurya) December 5, 2018
ஏற்கனவே இப்படத்தின் டீசரை பார்த்த சென்சார் அதிகாரி ஒருவர், ’விஸ்வாசம்’ டீசர் மாஸாக இருப்பதாக கூறியதயடுத்து, ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஸ்வாசம் டீசரில் அஜித் வரும் காட்சிகளில் உடல் சிலிர்ப்பதாகவும் கூறிய அவர், ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வெற்றியை தொடர்ந்து ‘விஸ்வாசம்’ மாஸ் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார். விஸ்வாசம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளது.