Home சினிமா தல அஜித்தின் விஸ்வாசத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

தல அஜித்தின் விஸ்வாசத்துக்கு ‘யு’ சான்றிதழ்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா-தல அஜித் கூட்டணியில் 4வதாக உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மதுரை பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ள இப்படத்தில் தல அஜித் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம்.

பொங்கல் ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி.இமான் இசையில் இப்படத்தின் மெரும்பாலான பாடல்கள் பட்டையை கிளப்பிய நிலையில், இப்படத்தின் டீசர் வரும் வியாழக்கிழமையோ அல்லது புத்தாண்டு பண்டிகைக்கோ வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

“பாஜக அழுத்தத்தால் சசிகலா விலகல்” : திருமாவளவன் கருத்து!

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தல்...

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு : கூட்டாக ஆலோசனை நடத்தும் பாஜக!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிரடியாக களமிறங்கியிருக்கிறது அதிமுக. சசிகலா வருகை, பாஜகவின் நெருக்கடி என பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் அதிமுக, எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டுமென துடித்துக்...

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி, இருவர் படுகாயம்!

கோவை கோவை அருகே சாலையோர விளம்பர பலகை மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொ.ம.தே.க.வுக்கு 2 சீட்; ஈஸ்வரன் மகிழ்ச்சி

எதிர்வரும் ஏப்ரல் 6 ம்தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மமக மற்றும் முஸ்லீம் லீக்குடன் தொகுதிப்பங்கீட்டு...
TopTamilNews